ஏற்கனவே படத்திற்கு பிரச்சனை.. திரும்பவும் வணங்கானுக்கு இப்படி ஒரு நிலைமையா

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி அறிமுகமாகிறார். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இடையில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு பல சமரச பேச்சு வார்த்தைகளுக்கிடையில் தற்போது இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது இந்த வணங்கான் டைட்டில் எனக்குத்தான் சொந்தம் என்று ஒருவர் கேஸ் போட்டுள்ளார்.

சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை எடுத்தவர் இயக்குனர் சரவணன். இவர் தற்போது பிக் பாஸ் புகழ் ஆரவ்வை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவர் தான் தற்போது வணங்கான் படத்தின் டைட்டில் எனக்குத்தான் சொந்தம் என்று கூறியிருக்கிறார். இதனால் சூர்யா உட்பட ஒட்டுமொத்த படகுழுவும் தற்போது பேரதிர்ச்சியில் இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தது.

மேலும் படம் அதிக நாட்கள் தாமதமாகி கொண்டே இருப்பதால் மற்ற பட வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் நடிகர்கள் உட்பட பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படி ஒரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் இந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சூர்யா இந்த படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதனால் கூடிய விரைவில் அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு விடும் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -