வலிமை பர்ஸ்ட் லுக் கொஞ்சம் தள்ளி போடு.. தல போட்ட ஆர்டரால் குழம்பிபோன வினோத்

தளபதியின் “பீஸ்ட்”பர்ஸ்ட் லுக் பட்டையை கிளப்பிய அதே நேரத்தில் தல ரசிகர்களுக்காக ஒரு அறிவிப்பு படக்குழு வசமிருந்து கசிந்திருந்தது. அந்த அறிவிப்பு தல ரசிகர்களை சந்தோசத்தின் கோபுரத்திற்கே கொண்டு சென்றிருந்தது.

அந்த அறிவிப்பின் படி வருகிற ஜூலை முதல் வாரத்தில் படத்தின் “பர்ஸ்ட் லுக்” வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது வந்த தகவல் தல ரசிகர்களின் சந்தோசத்தினை சரிந்து விழ வைத்துவிட்டது.

அது என்னவென்றால் இப்போது அவசரமில்லை படம் முழுமையாக முடிந்த பிறகு வெளியிடலாம் என தல திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம். தலயே சொல்லிய பிறகு வால் எங்கே ஆடுவது என்று வினோத் உட்பட மொத்த டீமும் கப்சுப் ஆனது.

valimai-cinemapettai
valimai-cinemapettai

சிலபல மாற்றங்களை செய்ய சொல்லி விட்டாராம் அஜித். பிறகு என்ன செய்வது சொன்னது தலயாச்சே. தல கூறியதில் ஏதேனும் காரணம் இருக்கும் என ரசிகர்களும் படக்குழுவும் சிந்தித்தவாரே உள்ளனர்.

- Advertisement -