ரஜினியை திமிரில் திட்டிய வடிவுக்கரசி.. தண்டவாளத்தில் தலையை வைத்து விட்ட சம்பவம்.!

ஒவ்வொரு நடிகரும் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் சில படங்கள் தான் அவருடைய சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும். அதே படம் தான் ரசிகர்களும் கொண்டாடி வருவார்கள். அந்த அளவிற்கு அந்தப் படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அதே மாதிரி ரஜினிக்கும் மறக்க முடியாத படங்கள் என்று சில படங்கள் இருக்கிறது. அதில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்று சொன்னால் அருணாச்சலம் படம்.

இப்படத்தில் ரஜினி எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். அத்துடன் இதில் ஒரு கேரக்டரை பார்த்து பயத்துடன் நடித்திருப்பார். அந்த கேரக்டர் தான் வடிவுக்கரசி. இவர் இப்படத்தில் ரஜினிக்கு பாட்டியாக மிரட்டி இருப்பார். இவரைப் பார்த்து அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பயப்படும் அளவிற்கு சிறந்த வில்லிபாட்டியாக நடித்தார்.

Also read: மலையாள சினிமாவில் ரஜினி நடித்த 2 படங்கள்.. கமலுடன் இணைந்து போட்ட வெற்றி கூட்டணி

மேலும் இப்படத்தில் ரஜினியை அதிக காட்சிகளில் முறைத்துக் கொண்டும் திட்டியும் இருப்பார். இது பார்க்கிற நமக்கு ஏன் இந்த தாய் கழுவி எதுக்கெடுத்தாலும் கோபமாக மூஞ்சியை வைத்துக்கொண்டு இப்படி இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு படத்தில் நடித்திருப்பார். ஆனால் இந்த படத்திற்கு இவருடைய நடிப்பும் மிகப்பெரிய பிளஸ் ஆக தான் இருந்தது. ஏனென்றால் அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

என்னதான் படமாக இருந்தாலும் என் தலைவரை எப்படி திட்டி இருக்கிறார் என்று ரஜினி ரசிகர்கள் இப்படத்தை பார்த்து ஆவேசப்பட்டு இருக்கிறார்கள். அப்பொழுது வடிவுக்கரசி வேறொரு பட சூட்டிங் காக ரயிலில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் திடீரென்று ரயில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அப்பொழுது வடிவுக்கரசியை சுற்றி ரசிகர்கள் கூட்டமாக கூடி கீழே இறங்கி வாங்க என கூப்பிட்டு இருக்கிறார்கள்.

Also read: உச்ச நட்சத்திரங்களை பார்த்தாலே வெறுப்பாகும் இயக்குனர்.. ரஜினி, கமல் இல்லாமலேயே கொடுத்த ஹிட் படங்கள்

இதை பார்த்த வடிவுக்கரசி ரொம்பவே பதட்டத்துடன் என்ன என்று கேட்டதற்கு எதற்காக என் தலைவரை நீங்க திட்னீங்க உடனடியாக மன்னிப்பு கேட்கணும், இல்லையென்றால் ரயிலே எடுக்க விடமாட்டோம் என்று சொல்லி தண்டவாளத்தில் தலையை வைத்து ரசிகர்கள் சண்டை போட்டனர். அதற்கு கோபத்துடன் வடிவுக்கரசி, நடிகர் ரகுவரனும் தானே திட்டி பேசி இருக்கிறார் நான் பேசக்கூடாதா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த ரசிகர்கள் ரகுவரன் திட்டினால் என் தலைவர் அவரை அடித்து விடுவார் ஆனால் உங்களை அடிக்கவில்லை. அதனால் நீங்க பேசுனதுக்கு மன்னிப்பு கேட்கணும் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்போது வடிவுக்கரசி வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதன் பின் தான் ரயிலே எடுக்க அனுமதித்திருக்கிறார்கள்.

Also read: நடிகைகள் என்றாலே ரஜினிக்கு ஆகாது..அயன் லேடியிடம் மட்டும் காட்டும் நெருக்கத்தை புட்டு புட்டு வைத்த சுஹாசினி

Next Story

- Advertisement -