பல பேர் வயித்தெரிச்சலை வாங்கி கட்டிய வடிவேலு.. சொதப்பும் ரீ என்ட்ரி, எல்லாம் அவர் விட்ட சாபம்

Actor Vadivelu: வடிவேலின் மீது இல்லாத குற்றச்சாட்டுகளே கிடையாது. அவருடன் நடித்த நடிகர்கள் முதல் பலரும் அவரைப் பற்றிய நெகட்டிவ் விஷயங்களை அம்பலப்படுத்தி வருகின்றனர். இதனாலேயே அவர் பலபேர் வயித்தெரிச்சலை வாங்கி கட்டிக் கொள்கிறார் என்ற ஒரு பேச்சும் இருக்கிறது.

அதிலும் ஷங்கர், சிம்புத்தேவன் போன்றோர் விட்ட சாபம் தான் அவருடைய அழிவுக்கு காரணம் என்றும் கூறுகின்றனர். ஏனென்றால் அவர்கள் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை தொடங்க முயற்சி செய்தபோது வடிவேலு ஏகப்பட்ட பிரச்சனைகளை கிளப்பினார். அதிலிருந்தே அவருடைய அழிவு காலம் ஆரம்பித்தது.

Also read: வயிறு குலுங்க சிரிக்க வைக்க டாப் 7 காமெடி நடிகர்கள் வாங்கும் சம்பளம்.. வடிவேலு முதல் யோகி பாபு வரை

அதை தொடர்ந்து இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் அவர் நடிப்பில் மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவந்துள்ளது. இருந்தாலும் அவருடைய பழைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலையில் தான் வடிவேலு இப்போது இருக்கிறார்.

ஏனென்றால் சந்திரமுகி 2 படத்தில் அவருடைய காமெடி ரசிக்கும் படி இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. வடிவேலு எப்போது நடிக்க வருவார் என்று ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

Also read: வடிவேலு எவ்வளவு அடிச்சும் ஆலமரம் போல் வளர்ந்த நடிகர்.. வேறு வழியில் சென்று வெற்றிகண்ட பிரபலம்

அதனாலேயே இப்போது ரசிகர்கள் காமெடி என்ற பெயரில் அவர் கடுப்பேத்தி வருகிறார் என்றும் இனிமேல் வடிவேலுவின் சாப்டர் க்ளோஸ் என்றும் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் ஓவர் தலைகனத்துடன் ஆடிக்கொண்டிருப்பது அவருக்கு நல்லதல்ல என்ற கருத்துக்களும் எழுந்து வருகிறது.

அந்த அளவுக்கு வைகை புயல் பாராபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் ஒரண்டை இழுத்து வைத்திருக்கிறார். அதையெல்லாம் ஓரம் கட்டினால் தான் இந்த செகண்ட் இன்னிங்ஸ் அவருக்கு கை கொடுக்கும். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் இவருடைய காமெடி இதே பாணியில் இருந்தால் ரீ என்ட்ரி ஆட்டம் கண்டுவிடும் என்பது தான் உண்மை.

Also read: 8 வருஷம் சினிமாவையே வெறுக்க வைத்த வடிவேலு.. மேடையிலேயே கண்ணீர் விட்ட இயக்குனர்