படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதா?. வேதனையில் இருக்கும் வடிவேலு

தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவானான வடிவேலு சினிமாவில் நடிக்க சிறிது காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் வடிவேலுவின் ரெட் கார்டு தடை நீங்கி தற்போது தன்னுடைய பட வேலைகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் நடிகை சிவானி நடித்துள்ளார். இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்புக்காக வடிவேலு லண்டன் சென்றபோது அவருக்கு தோற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.

இன்னும் சில நாட்களில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் நிறைவு பகுதியை அடைய உள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று விட்டதாக இணையத்தில் செய்திகள் உலாவத் தொடங்கியது.

இதை அறிந்த வடிவேலு தற்போது வேதனையில் உள்ளாராம். எப்படி எல்லாம் கிளப்பி விடுறாங்க பாருங்க என அவருடைய டயலாக்கை சொல்லியே பலபேரிடம் புலம்பிக் தவிக்கிறாராம் வடிவேலு. இந்நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தொடர்ந்து உதயநிதியின் மாமன்னன் படத்தில் வடிவேலு நடிக்கயுள்ளார்.

மேலும் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க திட்டமிட்டுள்ளாராம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக திரையில் வராத வடிவேலை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு விருந்தாக நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.