தனுஷின் ‘படிக்காதவன்’ படத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வடிவேலு.. முறுக்கு மீசையுடன் கெட்டப்பு தாறுமாறு

தமிழ் சினிமாவில் 2009ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான அதிரடியும் நகைச்சுவையும் கலந்த திரைப்படமான தனுஷின் ‘படிக்காதவன்’ படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் காமெடி நடிகராக விவேக் நடித்திருப்பார். ஆனால் விவேக்கிற்கு முன்பு வைகைப்புயல் வடிவேலு தான் இந்த படத்திற்கு கமிட்டாகி இரண்டு நாள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளாராம்.

அப்போது வடிவேலு ஸ்கிரிப்டில் இல்லாததையும் டைமிங்க்கு ஏற்றாற்போல் நடிப்பதால், அவருடைய அந்த நடிப்பு மற்ற நடிகர் நடிகைகளை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருந்ததால் பீதியடைந்த தனுஷ்,

‘அண்ணா ஸ்கிரிப்ட்டில் இருப்பதை மட்டும் நடியுங்கள்’ என்று வடிவேலுடன் தனுஷ் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால் கோபமடைந்த வடிவேலு தனுஷின் மூஞ்சிக்கு நேராகவே, ‘இதில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை’ என்று இயக்குனரிடம் தெரிவித்து கிளம்பி விட்டாராம்.

Padikkathavan-cinemapettai

அதன் பின்புதான் அந்த வாய்ப்பு விவேக்குக்கு கிடைத்ததாம். இந்நிலையில் படிக்காதவன் திரைப்படத்தில் தனுஷுடன் வடிவேலு நடித்த ஒருசில காட்சியின் புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில், அவருடைய ரசிகர்களால் வியந்து பார்க்க வைக்கிறது.

ஒருவேளை ‘படிக்காதவன்’  படத்தில் வடிவேலுடன் தனுஷ் இணைந்து நடித்திருந்தால் வித்தியாசமான காம்பினேஷனில் காமெடி படம் உருவாகி இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் இந்த வாய்ப்பை இருவரும் தவற விட்டு விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -