மீண்டும் களத்தில் இறங்கும் இம்சை அரசன்.. ஷங்கர், வடிவேலு பஞ்சாயத்தில் இறங்கிய தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் நடிக்காவிட்டாலும் தற்போது வரை மீம்ஸ் மூலம் கலக்கி வருகிறார் வடிவேலு. இவர் இல்லாமல் எந்த ஒரு மீம்ஸ் கிரியேட் பண்ண முடியாது.

அந்த அளவிற்கு தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி விட்டார். 2006 ஆம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இந்த படத்தை தயாரித்த ஷங்கர் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று கூறுகையில் சம்பள பிரச்சனையால் நான் நடிக்க மாட்டேன் என்று வடிவேலு தெரிவித்துவிட்டார். இதனால் பல பஞ்சாயத்துகளை சந்தித்து, இதற்காக ஷங்கர் வடிவேலு மீது வழக்கு பதிவு செய்ததும் நிலுவையில் உள்ளது.

தற்போது ஒரு சுமூகமான முடிவுக்கு வரலாம் என்று முடிவெடுத்துள்ளனர். அதாவது பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் தற்போது இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்.

விரைவில் வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவேலுவின் வருகைக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் வடிவேலு நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

imsai-arasan
imsai-arasan