இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு.. மாரி செல்வராஜ் செய்யப் போகும் சம்பவம்

இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தான் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்னும் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி அடைந்தார். தென் மாவட்டங்களில் நடக்கும் சாதிய அரசியலை எதார்த்தமான கதைக்களத்தில் எடுத்து தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார் இவர்.

அதன் பின்னர் நடிகர் தனுஷை வைத்து திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் கர்ணன். இந்தப் படமும் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படத்தை ரசிகர்களும் ரொம்ப ஆவலாக எதிர்பார்க்க தொடங்கி விட்டார்கள்.

Also Read:உதயநிதி, வடிவேலு காம்போவில் வெளியான மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக்.. துப்பாக்கி, கத்தியுடன் மிரட்டல்

இந்நிலையில் தான் மாரி செல்வராஜ் தன்னுடைய அடுத்த படத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கியிருக்கிறார். மாமன்னன் படத்தில் உதயநிதியுடன் இணைந்து வைகைப்புயல் வடிவேலு நடிக்கிறார் என்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்று கூட்டியது என்றே சொல்ல வேண்டும். மேலும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக அதிகரிக்கும் வகையில் படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

அந்த போஸ்டரில் உதயநிதி ஸ்டாலின் கையில் கத்தியுடன் அமர்ந்திருப்பது போலவும், வடிவேலு வெள்ளை வேஷ்டி சட்டையில் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. இதுவரை ரசிகர்கள் பார்க்காத வடிவேலின் முகம் இந்த போஸ்டரில் இருந்தது. இதிலிருந்தே வடிவேலு இந்தப் படத்தில் ஏதோ ஒரு சீரியஸ் கேரக்டரில் நடிக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. இது இயக்குனர் மாரி செல்வராஜின் வித்தியாசமான முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

Also Read:உதயநிதிக்கு சினிமா ஆசையை தூண்டிவிட்ட இயக்குனர் .. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத கடைசி படம்

மாரி செல்வராஜின் இந்த மாமன்னன் திரைப்படம் ஆணவக் கொலை சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்ட கதையாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வடிவேலு ஆணவ கொலை செய்யும் அளவிற்கு வில்லத்தனமான கேரக்டரிலும் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. மாரி செல்வராஜூம் படத்தை பற்றி அப்டேட்டின் போது இதுவரை பார்க்காத வடிவேலுவை இந்த படத்தில் பார்ப்பீர்கள், அவர் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார் என்று சொல்லி இருந்தார். அதற்கேற்றது போல் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது.

வைகைப்புயல் வடிவேலு தன்னை ஒரு காமெடியனாக நிலைநிறுத்திக் கொண்டாலும், பெரும்பாலான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஒருவேளை இந்த மாமன்னன் படத்தில் நெகட்டிவ் கேரக்டரை முயற்சி செய்திருந்தால் அதுவும் அவரை ஒரு வித்தியாசமான நடிகராக ரசிகர்களிடையே கொண்டு சேர்க்கும். மேலும் இதன் பிறகும் நிறைய படங்களில் வடிவேலுவுக்கு நெகட்டிவ் கேரக்டர் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

Also Read:வடிவேலுவை வச்சு செய்யும் 5 பெரிய ஹீரோக்கள்.. சுத்தி சுத்தி அடிக்கும் கர்மா!

 

 

- Advertisement -