வடிவேலு பட வாய்ப்பை தட்டி தூக்கிய யோகி பாபு.. ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவற்றில் எல்லா படங்களும் வெற்றிப் படங்களாக அமைவதில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே இரண்டாம் பாகமும் வெற்றிப்படமாக அமைகின்றன.

அந்த வகையில் சிங்கம், காஞ்சனா, பில்லா, விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, அரண்மனை, சாமி உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் மற்றுமொரு சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் முரளி மற்றும் வடிவேலு காம்போவில் ஒரு காமெடி கலாட்டாவாக உருவாகியிருந்த சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் தான் தற்போது உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடித்திருந்த வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்க இருப்பதாகவும், முரளி கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் காமெடி மன்னன் என்றே வடிவேலுவை கூறலாம். அந்த அளவிற்கு அவரது காமெடிகள் ரசிக்கும்படியாக இன்றளவிலும் இருந்து வருகின்றன. சுந்தரா டிராவல்ஸ் படத்திலும் அவரது காமெடி அனைவரும் ரசிக்கும் படியாக இருந்தது. இந்நிலையில் வடிவேலு இடத்தை யோகி பாபு பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

sundara-travels-2
sundara-travels-2
- Advertisement -