வடிவேலுவை நடிக்க விடாமல் பண்ணியது ஜெயலலிதா இல்லையாம்.. இதுதான் காரணமாம்? கண்டபடி சுத்திவிடும் பயில்வான்

இத்தனை நாள் வடிவேலு நடிக்காததற்கு காரணம் ஒரு அரசியல் பிரமுகர் என்று செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். மேலும் அவர் நடிக்காமல் போனதற்கு காரணம் என்ன என்பதை பயில்வான் வெளிப்படையாக கூறியுள்ளார்.

வடிவேலு தொடர்ந்து படங்கள் நடிக்காமல் போனதற்கான காரணத்தை பலரும் பல்வேறு விதமாக கூறிவருகின்றனர். ஒரு சிலர் வடிவேலுவின் திமிர்த்தனம் அவரை படத்தில் நடிக்க விடாமல் செய்தது, வேறு சிலர் அவர் படத்தில் நடிக்காமல் போனதற்கு அரசியல் பிரமுகர்கள் காரணம் என கூறி வந்தனர். ஆனால் பயில்வான் ரங்கநாதன் நடிக்காமல் போனதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

அதாவது வடிவேலு திமுக கட்சிக்கு ஆதரவாக பேசி வந்தார். ஆனால் அப்போது ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக வெற்றி பெற்றார். அதன் பிறகு வடிவேலு எந்த ஒரு படத்தில் நடிக்காமல் சினிமாவை விட்டு சிலகாலம் விலகியிருந்தார். இதற்கு பலரும் ஜெயலலிதா அவர்கள்தான் வடிவேலுவை சினிமாவில் நடிக்க விடாத அளவிற்கு சதி செய்தார் என கூறி வந்தனர்.

இதனை பயில்வான் ரங்கநாதன் முற்றிலுமாக மறுத்துள்ளார். அதாவது வடிவேலுவை எப்போதும் ஜெயலலிதா அவர்கள் கருத்தில் கொண்டதே இல்லை, ஏனென்றால் ஜெயலலிதா அவர்களின் மதிப்பும், மரியாதையும் வேறு, வடிவேலுக்கு கிடைத்த வரவேற்பு வேறு என கூறியுள்ளார்.

vadivelu-cinemapettai
vadivelu-cinemapettai

அதாவது ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராக இருந்துள்ளார். அப்படி இருக்கும்போது அவர் அவருக்கு இணையான போட்டியாளர்களை தான் கருத்தில் கொள்வார் இந்த மாதிரி ஒரு காமெடி நபரை எல்லாம் பெரிதும் கண்டுகொள்ள மாட்டார் என கூறினார்.

மேலும் வடிவேலு தொடர்ந்து நடிக்காமல் போனது காரணம் வடிவேலு ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கு வந்த திமிர்த்தனம், அகராதி குணமும் மற்றும் பேச்சு நக்கல் போன்றவற்றில் தான் பட வாய்ப்பு இழந்தார் என கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்