மீண்டும் வடிவேல்லிடம் தஞ்சமடைந்த பிரபல தயாரிப்பாளர்.. இந்த படம் எனக்கு வேண்டாம்

தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வந்த வடிவேலு ஹீரோவாக அறிமுகமான படம் தான் 23ஆம் புலிகேசி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்த்த ஒரு திரைப்படம் என்றும் கூறலாம். அந்த அளவிற்கு நகைச்சுவை கலந்த ஒரு சிறந்த படமாக அமைந்து இருந்தது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் முடிவடைந்து உள்ளது. இடையில் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தது. 24ம் புலிகேசி என்ற பெயரில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளிவந்தது. ஆனால் ஷங்கர் மற்றும் வடிவேலு இடையே நடந்த பிரச்சனையால் இப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில்தான், இப்பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்ப்பதற்காக தயாரிப்பாளர்கள் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால், இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், இப்படத்தின் இரண்டாம் பாகம் வேண்டாம் என்று வடிவேலு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

shankar
shankar

23ஆம் புலிகேசி படத்தை போலவே அதன் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. விரைவில் பிரச்சனைகள் முடிந்து 24ம் புலிகேசி வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் வடிவேலு இரண்டாம் பாகத்திற்கு நோ சொல்லியுள்ளார் எனும் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -