மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா? மேடையில் எஸ்கேப் ஆக முடியாமல் பதில் சொன்ன வடிவேலு

வைகைப்புயல் வடிவேலுவின் ரீஎன்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், கொண்டாட்டமாகும் அமைந்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு நகைச்சுவை புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஷங்கர் தயாரிப்பில் 24ம் புலிகேசி திரைப்படத்தில் நடிப்பதில் வடிவேலுவிற்கு ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளால் அவரால் அந்த படத்தை முழுமையாக முடிக்க இயலவில்லை .

அதனால் தயாரிப்பு நிறுவனம் வடிவேலுவை படத்தில் செட்டிற்கு செய்த செலவை ஒப்புக்கொள்ள சொன்னது. அதனை ஏற்க மறுத்ததால் தயாரிப்பு சங்கம் வடிவேலுக்கு ரெக்கார்ட் கொடுத்தது. இதனால் வடிவேலு புதிய திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை. இப்போது அந்த பிரச்சனைகள் பேச்சுவார்த்தைகள் மூலமாக முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து வடிவேலு சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகிறார்.

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் வடிவேலு. இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் பேட்டி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெற்றது. இதில் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கும் சங்கர் படம் பற்றிய கேள்விக்கும் பதில் அளித்து இருக்கிறார் வடிவேலு.

வைகைப்புயல் என்று தன்னை ரசிகர்கள் அன்பாக அழைப்பார்கள். ஆனால் என் வாழ்க்கையில் நான் சூறாவளி புயல் சந்தித்து விட்டதாகவும், இனி சங்கரின் தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருந்தார்.

vadivelu

அதைத் தொடர்ந்து திரைப்படத்தில் மட்டுமே நடிக்க போவதாகவும் அரசியல் பற்றிய எந்த எண்ணமும் இல்லை என்றார். மக்களுக்காக தன் கடைசி மூச்சுவரை நடிப்பதை என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்