படப்பிடிப்பிலேயே தனுஷை அசிங்கப்படுத்திய வடிவேலு.. ஓவர் ஆட்டத்தால் பறிபோன பட வாய்ப்பு

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்போது நடிப்பதை காட்டிலும் இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த இருக்கிறாராம். இந்நிலையில் வடிவேலுவால் தனுஷ் அசிங்கப்படுத்த விஷயத்தை இயக்குனர் சுராஜ் கூறியிருக்கிறார்.

அதாவது வடிவேலு ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தாலும் தன்னுடைய திறமையால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றார். திறமை இருக்கும் இடத்தில் ஆணவம் எப்படி இருக்குமோ அதேபோல் தான் வடிவேலும் சில இடங்களில் வாய் துனுக்காக பேசக்கூடியவர். இதனால் பல பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார்.

Also Read : ஜெயம் ரவி நடித்ததால் தான் படம் பிளாப்.. தனுஷ் நடித்திருந்தால் படம் ஹிட் ஆயிருக்கும்

அதேபோல் சுராஜ் இயக்கத்தில் தனுஷ் படிக்காதவன் படத்தில் நடித்திருந்தார். தனுஷுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்குமோ அதற்கு ஒரு படி மேலாகவே விவேக்-க்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அசால்ட் ஆறுமுகமாக விவேக் சம்பவம் பண்ணியிருப்பார்.

இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் இந்த படத்தை ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து கண்டுகளிப்பார்கள். படிக்காதவன் படத்தில் முதலில் விவேக் நடிக்க இருந்த கேரக்டரில் வடிவேலு தான் நடிக்க வேண்டியது. ஆரம்பத்தில் இதற்காக இரண்டு மூன்று நாட்கள் படப்பிடிப்பும் சென்றுள்ளது.

Also Read : மலையாளத்திலும் கல்லா கட்ட பார்க்கும் தனுஷ்.. 100 கோடி வசூல் படத்தை வளைத்து போட திட்டம்

அப்போது தனுஷ் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் சினிமாவில் வடிவேலு உச்சத்தில் இருந்தார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் எல்லோர் முன்னிலையிலும் தனுஷை திட்டி வடிவேலு அவமானப்படுத்தி விட்டாராம். இதனால் தனுஷுக்கு அந்த சமயத்தில் தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு தான் வடிவேலுக்கு பதிலாக விவேக்கை படக்குழு படிக்காதவன் படத்தில் போட்டு இருந்தனர். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் தனுஷ் மற்றும் விவேக் காம்போவில் நிறைய படங்கள் வெளியாக தொடங்கியது. அந்த வகையில் வேலையில்லா பட்டதாரி படத்திலும் இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆனது.

Also Read : தமிழ் படத்தில் இடம் பிடித்த மிரட்டலான 4 ஆங்கில பாடல்கள்.. ஆடுகளத்தில் ஆட்டம் போட்ட தனுஷ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்