யாரும் எதிர்பாராத கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு.. 35 வருட தவத்தை கலைக்கிறார்

வைகைபுயல் வடிவேலு பல வருடங்களாக தமிழ் சினிமாவை தன்னுடைய அற்புதமான நகைச்சுவையால் கட்டிப் போட்டுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு நடிகராக இருக்கும் இவர் காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி இருக்கிறார். அதில் எம் மகன் திரைப்படத்தில் பரத்தின் தாய்மாமனாக நடித்த இவருடைய நடிப்பு பலருக்கும் பிடிக்கும்.

இப்படி தன்னுடைய 35 வருட சினிமா வாழ்வில் ஏகப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இவர் ஒரே ஒரு கதாபாத்திரத்தில் மட்டும் இதுவரை நடித்தது கிடையாது. பன்முக திறமை கொண்ட வடிவேலு தன்னுடைய திறமையை நிரூபித்த படங்கள் ஏராளமாக இருக்கிறது. ஆனால் அவர் இதுவரை வில்லனாக மட்டும் நடித்ததே கிடையாது.

Also read : பெரிய ஹீரோக்கள் படத்திற்கு வடிவேலு வைக்கும் செக்.. மாட்டி முழிக்கும் தயாரிப்பாளர்கள்

தற்போது அவருக்கு அந்த குறையும் நீங்கி இருக்கிறது. ஏனென்றால் ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் வடிவேலு வில்லனாக களம் இறங்கியுள்ளார். சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு என்ற திரைப்படத்தை இயக்கிய ராம் பாலா தற்போது ஜிவி பிரகாஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

அந்தப் படத்தில் தான் வடிவேலு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கிய வடிவேலு இயக்குனரின் வற்புறுத்தலின் பேரில் நடிக்க சம்மதித்திருக்கிறார். இந்த செய்தி அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Also read : குமுறி அழுத போண்டாமணி.. மலைபோல் நம்பிய வடிவேலு செய்த பெரிய துரோகம் .

ஏனென்றால் வடிவேலுவை காமெடியன், ஹீரோ, குணச்சித்திரம் போன்ற பல கதாபாத்திரங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஹீரோவாக அவர் நடிக்கும் திரைப்படங்களில் கூட நகைச்சுவை உணர்வு கலந்து தான் இருக்கும். அவ்வளவு ஏன் அவர் எந்த வசனமும் பேசாமல் சும்மா நின்றாலே பார்ப்பவர்களுக்கு சிரிப்பு வந்துவிடும். அந்த அளவுக்கு அவருடைய உடல் மொழியே நகைச்சுவையை கொடுக்கும்.

அப்படி இருக்கையில் வடிவேலு வில்லனாக எப்படி இருப்பார் என்பதை நினைக்கும் போதே ரசிகர்களுக்கு அந்தப் படம் குறித்து மிகப்பெரிய ஆவல் எழுந்துள்ளது. அனைத்து கேரக்டர்களிலும் கலக்கி வரும் வடிவேலு நிச்சயம் வில்லனாக ரசிகர்களை கவர்வார் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் இப்படம் வடிவேலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும்.

Also read : நடிப்பை நிறுத்திய வடிவேலுக்கு நிகரான நடிகர்.. கமல் படத்தோடு எண்டு கார்டு போடும் காமெடியன்