5 வருடம் கதறவிட்டாலும் திருந்தாத வடிவேலு.. சிங்கமுத்து சொன்னதுலாம் சரிதான் போல

கோலிவுட்டின் காமெடி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த வடிவேலுவை, 5 வருடங்களுக்கு முன்பு ஒரு சில காரணத்திற்காக ரெட் கார்ட் கொடுத்து படங்களில் நடிக்க விடாமல் கதற விட்டனர். ஆனால் அப்படி செய்தும் வடிவேலு இன்னும் திருந்திய பாடில்லை.

ஏனென்றால் மீண்டும் படம் நடிக்க வேண்டும் டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்க வேண்டும் என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகுகிறார். இருப்பினும் சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு யாரையும் மதிப்பதில்லை. இஷ்டத்திற்கு வருவது இஷ்டத்திற்கு போவது என்று தான் இருக்கிறார்.

Also Read: ஓவர் திமிரில் ஆடிய வடிவேலு.. 85 படங்களில் நடித்தும் கிடைக்காத அங்கீகாரம்

அவர் சினிமாவில் இல்லாத நேரத்தில் வளர்ந்த ஆட்களையெல்லாம் சந்தித்து வருகிறாராம். இதற்கு உள் அர்த்தங்கள் நிறைய இருக்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் அவர்களை தன் பக்கம் இழுத்து காமெடி ட்ராக் செய்வதற்காக பலே திட்டம் போட்டு வருகிறாராம் வடிவேலு.

ஏற்கனவே முன்பு ஒரு படத்தில் அல்வா வாசு, முத்துக் காளை போன்றவர்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது, அதை பார்த்த தயாரிப்பாளர் அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்று கேட்டிருக்கிறார். 1500 ரூபாய் என்று கூறவே, ரொம்ப குறைவாக இருக்கிறது 5000 ரூபாய் வரை கொடுங்கள் என்று தயாரிப்பாளர் சொல்லியிருக்கிறார்.

Also Read: 65 வயசு, உருவ கேலி வடிவேலுவின் படம் இனி ஓட வாய்ப்பு இல்ல.. நாய் சேகர் பிளாப் என முன்பே கணித்த பிரபலம்

இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வடிவேலு அவர்களுக்கு ரூபாய் 1500 ஜாஸ்தி என்று ப்ரொடியூசரை திட்டி விட்டாராம். இப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் வளரும் நடிகர்களிடம் தன்னுடைய அகம்பாவத்தை காட்டிருக்கும் வடிவேலும், ஒரு காலத்தில் தன்னுடைய நிலையும் அதுதான் என தெரியாமல் ஓவர் ஆட்டம் போடுகிறார்.

மேலும் அவருடைய 12 வருட கூட்டாளி சிங்கமுத்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை பார்த்துவிட்டு வடிவேலுவின் நண்பராக பல விஷயத்தை உடைத்துக் கூறினார். அவர் சொன்னது எல்லாம் சரிதான் போல என்பது வடிவேலுவை பற்றி தற்போது வெளியான தகவலை வைத்து பார்த்தால் தெரிகிறது.

Also Read: விஜய் டிவியால் சாவின் விளிம்பிற்கு செல்லும் காமெடி நடிகர்கள்.. செஞ்சாலும் குத்தம் செயலானாலும் குத்தமா!

- Advertisement -