இம்சை அரசன் மீசை, கௌபாய் கெட்டப்.. இணையத்தில் லீக் ஆன வடிவேலுவின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. காமெடி என்ற வார்த்தை சொல்லி விட்டாலே அவரை காமெடி நடிகர்களாக ஏற்றுக் கொள்ளும் அவலம் தான் நடைபெற்று வருகிறது.

நீண்ட நாட்களாகவே சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க தடுமாறிக் கொண்டிருக்கும் வடிவேலு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க பல வருடங்களாக போராடி வருகிறார். ஆனால் எதுவுமே கைகொடுத்த பாடில்லை.

இத்தனைக்கும் விஜய் நடித்த மெர்சல் படத்தில் வடிவேலு காமெடி நடிகரா அல்லது குணச்சித்திர நடிகரா என்ற சந்தேகத்திலேயே முடிந்துவிட்டது. அதன்பிறகு அவர் நடித்த படங்களிலும் பெரிதாக இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களை ஈர்க்க வில்லை.

இதற்கிடையில் கண்டிப்பாக ஓடிடி தளத்தில் ஒரு வெப்சீரிஸ் நடிக்கப் போவதாக கூறியிருந்தார். ஆனால் வடிவேலு ஒரு படத்தையே சத்தம் இல்லாமல் நடித்து முடித்து விட்டார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்சேதுபதிக்கு சூதுகவ்வும் என்ற வெற்றி படத்தை கொடுத்த நலன் குமாரசாமி இயக்கத்தில் வடிவேலு நடித்திருக்கும் காமெடி கௌபாய் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே இணையத்தில் கசிந்துள்ளது.

vadivelu-comedy-cowboy-firstlook-leaked
vadivelu-comedy-cowboy-firstlook-leaked

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்த வடிவேலுவுக்கு இந்த படம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போதே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. வடிவேலு நலன் குமாரசாமி இருவரும் இணையும் படத்தை பற்றிய தகவல் வந்ததை தொடர்ந்து இந்த போஸ்டர் ரசிகரின் கைவரிசையில் உருவான போஸ்டராக இருக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்