மீண்டும் வித்யாசமாக களமிறங்கும் வடிவேலு.. உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் வடிவேலு இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் மாபெரும் வெற்றி பெற்றன. அதற்கு முக்கிய காரணமே வடிவேலுவின் நகைச்சுவை பேச்சும் நடிப்பும் தான் இதனை ரசிகர்கள் பலமுறை கூறியுள்ளனர்.

வடிவேலு சமீப காலமாக சினிமாவை விட்டு விலகியுள்ளார். அவர் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் அவரை பற்றிய செய்திகளும் அவர் செய்த காமெடி காட்சிகளும் சமூகவலைதளத்தில் இன்றுவரை பிரபலமாகத் உள்ளன. அதுமட்டுமில்லாமல் இவர் செய்த காமெடிகளை வைத்து தற்போது வரை பல மீம்ஸ்கள் உருவாகியுள்ளன.

பரிவர்த்தனை காமெடி நடிகர் வந்தால் அத்தனை நடிகர்களுக்கும் போட்டியாக இருப்பவர் வடிவேலுதான் வடிவேலு சினிமாவை விட்டு விலகிய பிறகுதான் மற்ற நடிகர்களின் மார்க்கெட் உயர்ந்தது. ஆனால் மீண்டும் அவர் சினிமாவிற்கு வந்து விட்டால் மற்ற காமெடி நடிகரின் நிலைமை என்ன ஆகும் என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

வடிவேலுவின் காமெடியை படத்தில் பார்க்க மாட்டோமா என ஏங்கி தவித்த ரசிகர்களுக்கு தற்போது அவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ள செய்தியறிந்து உற்சாகத்தில் உள்ளனர். இவர் பிரபல வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

vadivelu
vadivelu

மேலும் எப்போது அந்த வெப்சீரிஸ் தொடங்கும் வடிவேலு எப்போது நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்து வடிவேலு சினிமாவில் நடிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். மேலும் தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -