வடிவேலுடன் நடிக்க மறுத்த 2 நடிகைகள்.. சுராஜ் செய்த தரமான செயல்

ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் 24ம் புலிகேசி படத்தினால் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு நடிப்பதற்கு தடை செய்தது பின்பு பேச்சுவார்த்தையின் மூலம் மீண்டும் வடிவேலு படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தற்போது வடிவேலு சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நாய் சேகர் எனும் படத்தில் நடிப்பதாக அறிவித்தனர் ஆனால் நாய் சேகர் என்ற தலைப்பில் ஏற்கனவே சதீஷ் தன் படத்திற்கு வைத்துள்ளதால் தற்போது வடிவேலு நடிக்கும் படத்திற்கு அந்த தலைப்பை வைக்கலாம் என தெரியாமல் படக்குழுவினர் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

keerthy-priya

ஆனால் வடிவேலுவின் நாய் சேகர் என படத்தின் தலைப்பை மாற்றியுள்ளனர். இருப்பினும் கவுன்சில் தரப்பினர் இந்த தலைப்பு தரப்படமாட்டாது கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் வடிவேலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர்ரிடம் பேச்சுவார்த்தை நடந்தது இருப்பினும் 2 கதாநாயகிகளும் சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஆனால் ப்ரியா பவானி சங்கர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் தான் வடிவேலுவுடன் நடிக்க முடியாமல் போனது இல்லை என்றால் பிரியா பவானி சங்கர் கண்டிப்பாக நடித்து இருப்பார் என சினிமா வட்டாரத்தில் கூறிவருகின்றனர். ஆனால் கீர்த்தி சுரேஷ் ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறார் அப்புறம் ஏன் இவர் ஒப்புக் கொள்ளவில்லை என கூறி வருகின்றனர். தற்போது இயக்குனர் கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளார்.

அதாவது படத்தில் கதாநாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் நீக்கி விட்டதாகவும் அதுமட்டுமில்லாமல் எமோஷனல் காட்சி எல்லாம் தூக்கி விட்டு முழுக்க முழுக்க வடிவேலு வைத்து காமெடி காட்சிகள் மட்டுமே எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்