சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு பட்டையை கிளப்பிய 5 படங்கள்.. மனுஷன் செமயா வச்சு செஞ்சிட்டாரு!

இயக்குனர் சுந்தர்சியின் பெரும்பாலான படங்கள் நகைச்சுவையாக தான் இருக்கும். ஆரம்பத்தில் இவர் எடுத்த படங்களில் ஹீரோவாக காட்டிலும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதன்பிறகு வைகைப்புயல் வடிவேலு உடன் சுந்தர் சி இணைந்து எடுத்த படங்களில் இடம்பெற்ற காமெடிகள் பெரிய வரவேற்பைப் பெற்றது. இவர்களது காம்போவில் பல படங்கள் வெளியாகி உள்ளது. அதில் சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு காமெடியை வைத்தே வெற்றிபெற்ற படங்களைப் பார்க்கலாம்.

வின்னர்: இந்தப் படத்தில் கைப்புள்ள கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். வின்னர் படத்தின் ஆரம்பம் முதலே வடிவேலின் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற பல வசனங்கள் இன்றும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் பயன்படுத்தி வருகிறார்கள். கட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல, அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என பல வசனங்கள் இடம்பெற்று இருந்தது.

கிரி: சுந்தர்சி இயக்கத்தில் அர்ஜுன், ரீமாசென், தேவயானி, வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம் கிரி. இப்படத்தில் வடிவேலு வீரபாகுவாக நடித்திருந்தார். உங்க அக்காவ நான் வெச்சிக்கிறேன் பேக்கரிய வென நீ வெச்சிக்கோன்னு சொன்னான்,
இவன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க என பல இடங்களில் வடிவேலு காமெடிக்கு கைதட்டல் கிடைத்தது.

இரண்டு: சுந்தர்சி இயக்கத்தில் மாதவன், ரீமாசென், அனுஷ்கா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் இரண்டு. இப்படத்தில் மாயாஜால வித்தைகளை செய்யும் கரிகாலன் ஆக வடிவேலு நடித்திருந்தார். இப்படத்தில் மாதவனை காட்டிலும் பல இடங்களில் வடிவேலு ஹைலைட்டாக தெரிந்தார்.

நகரம்: சுந்தர் சி இயக்கி, கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் நகரம். இப்படத்தில் வடிவேலு ஸ்டைல் பாண்டியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் ஒவ்வொரு கவுண்டர்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
நகரம் படத்தை வடிவேலுகாகவே பலமுறை பார்த்த ரசிகர்களும் உண்டு.

லண்டன்: பிரசாந்த், பாண்டிராஜ், வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம் லண்டன். இந்தப் படத்தில் வடிவேலு வக்கீல் வெடி முத்தாக நடித்திருந்தார். இவரது மனைவியாக நளினி நடித்திருந்தார். இப்படத்தில் வடிவேலுவின் முகபாவனையும் நகைச்சுவையும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கச் செய்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்