வாடி போடி, நீ என்ன பெரிய இவளா குழாயடி சண்டையாக மாறிய பிக்பாஸ் வீடு.. தனலட்சுமி டார்கெட் செய்த அடுத்த நபர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. தினமும் போட்டியாளர்களுக்குள் ஏதாவது சண்டையை மூட்டிவிடும் படியான டாஸ்களை பிக் பாஸ் கொடுத்து வருகிறார். இதனால் பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறி உள்ளது.

தற்போது இரண்டு அணிகளாக பிரிந்து தங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் மூலம் இனிப்பு பலகாரம் செய்ய வேண்டும். இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் இரண்டு அணிகளுக்கும் ஒரு லிப்டில் பொருள் வரும். முதலில் யார் எடுக்கிறார்களோ அந்த அணிக்கு தான் அந்த பொருள் சேரும்.

Also Read :விதிகளை மீறியதால் எலிமினேட் செய்யப்பட்ட ஷெரினா.. 28 நாட்களுக்கு பிக் பாஸ் கொட்டி கொடுத்த சம்பளம்

ஆகையால் இரண்டு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு பொருளை எடுப்பதில் மும்மரம் காட்டி வருகிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக தனலட்சுமி மற்றும் மணிகண்டன் இடைய சண்டை ஏற்படுகிறது. அப்போது மணிகண்டன் வாடி போடி, நீ என்ன இவளா என கடுமையாக சாடுகிறார்.

அதேபோல் தனலட்சுமி போடா என மணிகண்டனை தரைக்குறைவாக பேசுகிறார். என்ன போடா வா, உனக்கு வயசு என்ன என்று ஆத்திரம் அடைந்த மணிகண்டன் எதிர் அணியில் உள்ள பொருட்களை சூறையாடுகிறார். இதனால் பிக் பாஸ் வீடு குழாயடி சண்டையாக மாறி உள்ளது.

Also Read :தளபதி வேண்டாம், பிக் பாஸ் நடிகர் போதும்.. திருமணத்திற்க்கு பின் ஹரிஷ் கல்யாணுக்கு அடித்த ஜாக்பாட்

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே தனலட்சுமி டார்கெட் செய்கிறார்கள். ஆரம்பத்தில் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இடையே சண்டை போய்க் கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து அசீம் மற்றும் செரீனா இருவரும் தனலட்சுமி மீது குறை சொன்னார். கடைசியில் ஆண்டவர் வந்து குறும்படம் போட்டு காண்பித்தார்.

இதனால் தனலட்சுமி மீது தப்பில்லை என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. இப்போது எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல இவ்வளவு நாள் சாதுவாக இருந்த மணிகண்டன் பொங்கி எழுந்த தனலட்சுமி கடுமையாக தாக்கி உள்ளார். ஆகையால் இன்றைய எபிசோட் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read :தாத்தாவானதால் வெளுத்து வாங்கும் ராதிகா.. இதுக்கு மேல அசிங்கப்பட ஒன்னும் இல்லை கோபி

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -