5.1 மில்லியன் ஃபாலோவஸ்களை பெற்ற விஜய் டிவி பிரபலம்.. வீடியோ போட்டே ஊரை ஏமாத்துற கில்லாடி!

சினிமா பிரபலங்கள் முதல் சீரியல் பிரபலங்களை சோஷியல் மீடியாவில் பின்தொடர்வதை அவர்களுடைய ரசிகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அத்துடன் அவர்கள் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தவறாமல் பார்த்து அதற்கு கமெண்ட் செய்வதையும் ரசிகர்கள் தங்களது பொழுதுபோக்காய் வைத்துள்ளனர்.

இன்னிலையில் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசா தனக்கென்று ஒரு தனி ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார். அவர்களை குஷிப்படுத்தும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களிடம் எந்நேரமும் தொடர்பில் இருந்து கொண்டே இருப்பார்.

இதனால் இவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 5.1 பில்லியனை தாண்டி உள்ளது. இவர் நேரலையில் ரசிகர்களை சந்திப்பது அவர்கள் கேட்கும் கேள்விக்கு தன்னுடைய கொஞ்சம் பேசினால் பதிலளித்து வருகிறார்.

அத்துடன் ஆலியா மானசா தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. அத்துடன் ஆலியா மானசா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

இந்த தகவலையும் அவர் தன்னுடைய சோசியல் மீடியாக்களில் அப்லோட் செய்திருந்தார். இதுமட்டுமின்றி இது தான் செய்யவேண்டும் என்பது இல்லாமல் இஷ்டத்திற்கு கார் டூர், பிரிட்ஜ் டூர் என்ற பெயரில் வீட்டிலுள்ள தூசி துரும்பை எல்லாம் சுற்றிக் காண்பித்து தனித்தனியாக வீடியோ போட்டு இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி இவருடைய மகள் அய்லா செய்யும் குறும்பு சேட்டையும் தவறாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கொண்டிருப்பதை ஆலியா மானசா வழக்கமாக வைத்திருக்கிறார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை