அஜித்திடம் இருக்கும் தரமான குணம்.. இதை மட்டும் கத்துக்கிட்டா விஜய் தான் அடுத்த CM

Ajith vs Vijay: நடிகர் விஜய் வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, நண்பர் அஜித்தை போல் டிரஸ் பண்ண வேண்டும் என ஆசைப்பட்டு கோர்ட் சூட் போட்டு வந்ததாக சொல்லி இருப்பார். ட்ரஸ்ஸில் மட்டும் இல்லை, அஜித்திடமிருந்து இந்த சில குணங்களை நீங்கள் கற்றுக் கொண்டால் கண்டிப்பாக அது உங்களுடைய அரசியல் வாழ்க்கைக்கு ரொம்பவும் வெற்றியாக அமையும் என பிரபலங்கள் சொல்லிய சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

அஜித்திடம் இருக்கும் நல்ல குணங்கள்

அஜித் குமார் யாருக்குமே உதவி செய்வதில்லை என்ற மாயபிம்பம் சினிமா வட்டாரத்தில் இருக்கிறது. ஆனால் உண்மையில் அஜித் தன்னை சுற்றி இருக்கும் நிறைய கலைஞர்களுக்கு உதவி செய்திருக்கிறார். அவர் செய்த உதவிகள் எதுவுமே வெளியில் தெரியாமல் இருப்பதற்கு காரணமும் அவர்தான். தன்னிடம் உதவி பெறுபவர்களிடம், இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லிவிடுவாராம்.

மேலும் அஜித் குமார் தன்னை பற்றி தானே சுய விளம்பரம் எதுவுமே செய்து கொள்வது கிடையாது. உண்மையை சொல்லப் போனால் அவர் வாயை திறந்து பொதுவெளியில் பேச மாட்டாரா என அவருடைய ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய படங்களுக்கு கூட பிரமோஷன் என எதுவுமே அவர் இதுவரையும் செய்வதில்லை. ரசிகர்களை உசுப்பேத்தி விடுவதும் கிடையாது.

Also Read:பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய்யை உருமாற்றும் வெங்கட் பிரபு. டைட்டிலுடன் வெளிவரும் பர்ஸ்ட் லுக் எப்ப தெரியுமா?

அது மாதிரி அஜித் சினிமா மற்றும் குடும்பத்திற்கு சரியான நேரத்தை செலவிடுகிறார். தன்னுடைய குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத அளவுக்கு பார்த்துக் கொள்கிறார். இதுவே விஜய் பக்கம் பார்த்தால், அவர் தன்னுடைய அப்பா அம்மாவையே தனியாக தவிக்க விட்டிருக்கிறார் என்ற பேச்சு இதுவரை இருந்து வருகிறது. போதாத குறைக்கு இப்போது விவாகரத்து என்ற வதந்தியும் கிளம்பி இருக்கிறது.

அதேபோன்று அஜித் தன்னை பற்றி தானே பேசிக் கொள்வது கிடையாது. மற்றவர்களை பேச வைக்கிறார். அஜித் அப்படி, இப்படி, அஜித் எங்களுக்கு அதை செய்தார், இதை செய்தார் என பிரபலங்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள். அவராக இறங்கி வந்து பஞ்ச் டயலாக் பேசுவது, வெற்றி விழா கொண்டாடுவது, மைக் பிடித்து பேசுவது என்று எதுவுமே செய்வது கிடையாது.

ஒரு காலகட்டத்தில் நடிகர் விஜய் இப்படித்தான் இருந்தார். ஆனால் அவருடைய பாதை அரசியலை நோக்கி பயணிக்கும் பொழுது தவறாக வழிநடத்தப்படுகிறாரோ என்ற சந்தேகம் சமீப காலமாகவே இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் இந்த சில குணங்களை விஜய் பின்பற்றினால் கண்டிப்பாக அடுத்த முதலமைச்சர் ஆக கூட ஆகலாம் என்று சொல்கிறார்கள் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

Also Read:2023-இல் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் 6 ஹீரோக்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய ஹீரோ

- Advertisement -spot_img

Trending News