சினிமாவில் நடிகர்கள் சமீப காலமாக தொடர்ந்து ஏதோ ஒரு சில பிரச்சனைகள் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து வருகின்றனர். பல மாதங்கள் முன்பு பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது அவரைத் தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகர் மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மலையாள சினிமாவில் ஒரு குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடித்துள்ளவர் உன்னி தேவ். இவர் இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம், ஆடு மற்றும் சிபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் எர்ணாகுளம் அங்கமாலி எனும் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
பிரியங்கா நகைகள் அனைத்தையும் விற்று செலவு செய்துள்ளார் உன்னி தேவ். மேலும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரியா அவர்களின் அம்மா பல முறை பணம் கொடுத்து உதவியுள்ளனர்.
உன்னி தேவ் பிரியங்காவை அடித்து உதைத்த வீடியோவும் பதிவு செய்துள்ளார். மேலும் போலீசாரிடம் தனது கணவர் துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். பின்பு பெற்றோரின் வீட்டிற்கு சென்ற பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆனால் பிரியங்காவின் உறவினர் ரேஷ்மா ஏதோ ஒரு போன்கால் வந்தது .அதன் பிறகுதான் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் உன்னி தேவ் சட்டப்படியாக தண்டனை வழங்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.