இவ்வளவு பிரச்சினையிலும் உதயநிதி செய்த விளம்பரம்.. நாலா பக்கமும் குவியும் காசு

Udhayanidhi Stalin: கடந்த சில தினங்களாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி கொண்டிருக்கும் சம்பவம் என்றால் அது அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது தான். ஆட்சியில் இருக்கும் ஒரு அமைச்சரை நடு இரவில் கைது செய்து, அவர் உடனே நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இருதய அறுவை சிகிச்சை வரை சென்று இருப்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கும் மருத்துவமனையில் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூட நேற்று இந்த கைது நடவடிக்கை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வெளியிட்ட இந்த வீடியோ வைரலாகி கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த செயல் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Also Read:மாமன்னன் வடிவேலுவால் அப்செட் ஆன உதயநிதி.. பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதை

ஒரு பக்கம் பத்திரிகையாளர்களிடம் மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள் என்று வாய்சவடால் பேசிவிட்டு, மறுபக்கம் மாமன்னன் திரைப்படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் இறங்கி விட்டார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மாமன்னன் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்படுவதாக நேற்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

தன் கட்சியைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் போலீசின் கிடுக்கு பிடியில் சிக்கிக் கொண்டதோடு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் பொழுது தன்னுடைய படத்திற்கு விளம்பரம் தேடிக் கொண்டிருப்பது மக்களிடையே வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது. அந்த அறிவிப்பை உதயநிதி வெளியிடாமல் அவருடைய டுவிட்டர் அட்மினை வெளியிட்டு இருந்தாலும், இது போன்ற சமயத்தில் இப்படி செய்திருப்பது தவறாகத்தான் தெரிகிறது.

Also Read:மிக பெரிய எதிர்பார்ப்பு, உதயநிதிக்கு வந்த தலைவலி.. மொத்தமும் புட்டுக்குன்னு போன மாமன்னன்

மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த மாத இறுதியில் படம் ரிலீஸ் ஆக இருப்பதால், ட்ரெய்லர் வெளியீடு பற்றி அறிவிப்பு வெளிவருவதற்கும் இது சரியான சமயம் என்றாலும், இனி எனக்கு சினிமா வேண்டாம் அரசியலில் முழு கவனம் செலுத்தப் போகிறேன் என்று வசனங்கள் பேசிவிட்டு, இப்படி ஒரு சமயத்தில் தன்னுடைய படத்திற்காக இந்த வேலையை உதயநிதி செய்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

உதயநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் கால் தடம் பதித்தவர். தன்னுடைய ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் நிறைய படங்களை இயக்கிய லாபம் பார்த்திருக்கிறார். சமீப காலமாக இந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கும் படங்கள் எல்லாமே பெரிய ஹிட் ஆகி கொண்டிருக்கின்றன. என்னதான் அரசியல், மக்கள் நலன் என்று பேசினாலும் சினிமாவில் காசு பார்த்த கை சும்மா இருக்காது என்பதை நிரூபித்து இருக்கிறார் உதயநிதி.

Also Read:ஆணவத்தால் ஆடும் வடிவேலு.. மாமன்னன் தோல்வி, பகிர் கிளப்பிய பயில்வான்

- Advertisement -