மிரட்டலான டைட்டிலுடன் வெளிவந்த உதயநிதியின் அடுத்த படம்.. தேசிய விருதுக்கு அடி போடும் இயக்குனர்

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு இறங்கிய பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க அதிக அளவு ஆர்வம் காட்ட மாட்டார் என்ற ஒரு கருத்து நிலவி வந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக உதயநிதி ஸ்டாலின் தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது .அதைத் தொடர்ந்து உதயநிதி, இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் ஒரு திரைப்படத்தில் இணைகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்தத் திரைப்படத்தில் நடிகர், நடிகைகள் யார் என்பதை பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் உதயநிதி கூட்டணியில் உருவாகும் அந்த திரைப்படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.

மலையாள நடிகர் பஹத் பாசில் தற்போது தீவிரமாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் அவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் இணைய இருக்கிறார். பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

udhayanithi
udhayanithi

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டர் ஆகவும், சாண்டி மாஸ்டர் இப்படத்திற்கு நடன இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள்.

முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை. இதுகுறித்த அறிவிப்பை இயக்குனர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் கண்டிப்பாக தேசிய விருது பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -