மாமன்னனுக்காக விட்டுக் கொடுத்த உதயநிதி.. மொத்தமாக தட்டிச் சென்ற வடிவேலு

Actor Vadivelu: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் கடந்த வாரம் வெளியானது. உதயநிதி, வடிவேலு உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதோடு சில விவாதங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

அதன்படி படத்தை பார்த்த பலரும் சாதிய அடக்குமுறை, அதிகார வர்க்கம் ஆகியவை குறித்த தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க படம் வெளியான இரண்டு நாளிலேயே பட குழுவினர் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடி இருந்தனர்.

Also read: ரஜினியை காக்க வைத்து வேடிக்கை பார்த்த வடிவேலு.. புகழ் போதையில் கொஞ்ச நஞ்ச ஆட்டமா!

இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் உதயநிதி இயக்குனருக்கு கார் பரிசளித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இப்படி மாமன்னன் டீம் இந்த படத்தை தாறுமாறாக கொண்டாடி வருகிறது. ஆனாலும் உதயநிதிக்கு வடிவேலுவால் சிறு சங்கடம் ஏற்பட்டுள்ளதாம்.

அதாவது மாமன்னன் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்திருக்கும் வடிவேலு தன்னுடைய அசாத்திய நடிப்பால் மகா நடிகன் என்ற பெயரை தட்டிச் சென்றிருக்கிறார். அது மட்டும் இன்றி இதுவரை அவரை காமெடி கேரக்டர்களில் கலாட்டாவாக பார்த்த பலரும் இதில் அவருடைய நடிப்பை பார்த்து மிரண்டு போயிருக்கின்றனர்.

Also read: Maamannan Movie Review- வடிவேலு என்னும் நடிகனை அடையாளப்படுத்திய மாரி செல்வராஜ்.. மாமன்னன் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

அந்த அளவுக்கு வைகைப்புயல் இப்படத்தில் வாழ்ந்து காட்டி இருக்கிறார். இதுதான் உதயநிதியின் சங்கடத்திற்கு காரணம். அதாவது தன்னுடைய கடைசி படம் தனக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனாலும் டைட்டில் கார்டு முதற்கொண்டு மற்ற பிரபலங்களை முன்னிறுத்தி அழகும் பார்த்தார்.

இந்நிலையில் வழக்கம் போல அவருடைய முகத்தில் நடிப்பே வரவில்லை என்ற விமர்சனங்களால் அவர் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம். அதனால் தான் சக்சஸ் மீட் கொண்டாட்டத்தில் கூட வடிவேலு இல்லை என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் வடிவேலு ஒதுக்கப்பட்டு விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Also read: உதயநிதியின் சினிமா கேரியரிலேயே மாமன்னன் தான் அதிக வசூலாம்.. மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்