ஒரு நாள் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி.. அஜித்தின் அறிவிப்பால் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தமிழகத்தின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கருதப்படும் அஜித்தின் படங்கள் திரையரங்கில் விட்டுக்கொடுக்காமல் தாறுமாறான வசூலை அள்ளுவது வழக்கம். அதேபோன்று சமீபத்தில் வெளியான துணிவு படத்தற்கு பிறகு தற்போது அஜித்தின் 62-வது படத்தை மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது அவரது பிறந்த நாளான இன்று ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் அஜித்தின் அறிவிப்பிற்கு முன்பே உதயநிதி தன்னுடைய ஆட்டத்தை துவங்கி விட்டார். தற்போது முழு அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் உதயநிதி, கடைசி கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: விடாமுயற்சிக்கு சம்பளத்தை வாரி வழங்கிய லைக்கா.. 2வது இடத்திற்கு முன்னேறிய அஜித்

மாமன்னன் படத்தின் போஸ்டர் மே ஒன்றாம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதேபோல் அஜித்தின் படத்தின் போஸ்டர் மே ஒன்றாம் தேதி என, அதற்கு அப்புறம் முடிவு செய்யப்பட்டது. சொன்ன மாதிரியே அஜித்தின் பிறந்தநாள் அன்று 12 மணிக்கு அவர் படத்தில் போஸ்டர் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது.

இதனால் மே ஒன்றாம் தேதி என அறிவித்த மாமன்னன் படத்தின் போஸ்டர் வெளியீடு திடீரென ஏப்ரல் 30ஆம் தேதியே வெளிவந்துவிட்டது. அஜித் படத்தின் அறிவிப்பு வெளிவந்தால் தன் படத்தின் வெளியிடும் செய்தி மற்றவர்களுக்கு சேராது என்று முடிவு எடுத்து ஒரு நாள் முதலிலேயே வெளியிட்டனர்.

Also Read: பவர்ஃபுல்லான டைட்டிலுடன் தயாராகும் 9 டாப் ஹீரோக்களின் படங்கள்.. இந்த மூன்றுக்கு தான் மவுசு அதிகம்

இது உதயநிதி சொல்லி நடந்ததா இல்லை படக்குழுவே முடிவு செய்ததாக என்று தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் சொன்ன ஒரு நாளுக்கு முன்பே வெளியிட்டதால் இது பயத்தினால் மட்டுமே என பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோன்று மாமன்னன் படத்தையும் மற்ற எந்த படங்களும் ரிலீஸ் ஆகாத தினத்தில் தான் ரிலீஸ் செய்யவும் முடிவு செய்து இருக்கின்றனர். ஏனென்றால் கடைசி கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியாக கூடிய மாமன்னன் படத்தின் வசூலை வேறு எந்த படமும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

Also Read: 95 கிலோ எடையின் சீக்ரெட்.. அஜித்துக்கு தலைவலியாக இருக்கும் பிரச்சனை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்