Connect with us
Cinemapettai

Cinemapettai

udhayanidhi-stalin

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவானதற்கு காரணம் இதுதான்.. நட்சத்திர ஹோட்டலில் நடந்த அவமானம்

மிகப்பெரிய அரசியல் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் தான் உதயநிதி ஸ்டாலின். ஆனால் அது சும்மா வரவில்லை எனவும், பெரிய ஹோட்டலில் அவருக்கு ஏற்பட்ட அவமானம் தான் அவரை ஹீரோவாக மாற்றியது எனவும் ஒரு செய்தி கிடைத்துள்ளது.

ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற காமெடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக மாறி முதல் படமே சூப்பர்ஹிட் படமாக கொடுத்தவர்தான் உதயநிதி ஸ்டாலின். அரசியல் பின்புலம் இருந்தாலும் சினிமா என்பது தனி தான்.

தனக்கு என்ன வரும் என்பதை தெளிவாக புரிந்துகொண்ட ஆரம்பத்தில் காமெடி படங்களை கொடுத்து வந்த உதயநிதி ஸ்டாலின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னால் மற்ற சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என நிரூபித்து வருகிறார்.

தற்போது கவனிக்கப்படும் ஹீரோவாக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நுழைவதற்கு ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடந்த பஞ்சாயத்தும், அவருக்கு ஏற்பட்ட அவமானம் தான் காரணம் என ஒரு செய்தி வந்துள்ளது.

சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றுக்கு வாரக்கடைசியில் நடிகர் விஷாலும் உதயநிதி ஸ்டாலினும் சென்றுள்ளனர். அப்போது விஷால் ஹீரோ என்பதால் அவரை மட்டும் உள்ளே அனுமதித்து விட்டு உதயநிதி ஸ்டாலினை வெளியில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

இதனால் டென்ஷனான உதயநிதி தன்னுடைய அரசியல் பலத்தை பயன்படுத்தி அந்த ஹோட்டலை ஒரு வழி ஆக்காமல் விட மாட்டேன் என சபதம் எடுத்து உடனடியாக பெரிய ஆட்கள் எல்லாம் ஹோட்டல் அத்துமீறி மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ளது என்பது போன்ற கேஸ் போட்டு இடிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

அதுமட்டுமில்லாமல் சுற்றியும் இளம் நடிகைகள் பலரும் இருந்ததால் தன்னுடைய கெத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் அதிரடியை எடுத்துள்ளார் உதயநிதி. மேலும் ஹீரோ இல்லை என்பதற்காக கேளிக்கை விடுதிக்குள் அனுமதிக்கப்படாத உதயநிதி ஹீரோவாகி விட்டு மீண்டும் இதே கேளிக்கை விடுதிக்கு வருகிறேன் என சபதம் எடுத்து அடுத்த சில மாதங்களிலேயே ஹீரோவாக மாறி விட்டாராம்.

udhayanidhi-stalin-vishal

udhayanidhi-stalin-vishal

Continue Reading
To Top