பாரதிகண்ணம்மாவுடன் சங்கமமாகும் மற்றொரு சீரியல்.. கதை இல்லாததால் என்னென்ன வேலை பண்றாங்க

விஜய் டிவி தற்பொழுது சீரியல்களை ஒளிபரப்பு செய்வதில் ஒரு புதிய யுத்தியை கையாண்டு வருகிறது. அதில், ஒரு மொக்கையாக போகும் சீரியலை சூப்பர்ஹிட்டாக போகும் மற்றொரு சீரியல் உடன் இணைத்து ஒளிபரப்பு செய்தால் டிஆர்பி எகிறும் என திட்டம் தீட்டி சில சீரியல்களை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பாக்கி வருகின்றனர்.

அந்த விதமாக மதியம் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ஆன ‘தென்றல் வந்து என்னைத்தொடும்’ சீரியலை, டல்லடிக்க தொடங்கிய ‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியல் உடன் இணைத்து ஒரு மணி நேர சிறப்பு காட்சியாக பல ஜாலியான சம்பவங்களுடன் மதியம் 2:30 மணி முதல் 3:30 மணி வரை ஒளிபரப்பி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஒரு கூட்டுக் குடும்ப கதையை மையக் கருவாகக் கொண்டு, ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் ஒரு கலக்கு கலக்கி சூப்பர்ஹிட் சீரியலாக டிஆர்பி ரேட்டிங்கையும் குவித்த வண்ணம் உள்ளது.

இதைப்போலவே ஒரு குடும்ப கதையாகவும், ஒரு அழகிய காதல் கதையாகவும், காமெடி, கலாட்டா மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடுகிற சீரியல்தான் ‘தமிழும் சரஸ்வதியும்’. இருந்தும் இந்த சீரியல் சிறிது மந்தமான நிலையில் உள்ளதால் சூப்பர்ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைத்து ஒரு மணி நேர ஸ்பெஷல் ஷோவாக மெகா சங்கமத்தில் இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நேற்று முதல் ஒளிபரப்ப தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு ஏற்கனவே நான்கு சீரியல்கள் மெகா சங்கமத்தில் இணைந்து கலக்கி வரும் நிலையில், மக்களுக்கு மேலும் ட்ரீட் கொடுக்கும் விதமாக மேலும் இரண்டு சீரியல்கள் ஒரு புதுப் பொலிவுடனும் ஆரவாரத்துடனும் ‘நம்ம வீட்டு திருவிழா’ என்று இணைந்து கலக்க காத்துள்ளனர்.

தற்பொழுது விறுவிறுப்பாகவும் பரபரப்பாகும் சென்று கொண்டிருக்கும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல், இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 உடன் இணைத்து ‘நம்ப வீட்டு திருவிழா’ என்னும் ஒரு குடும்ப திருவிழாவாக கொண்டாடப்படுகிற தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. ஏற்கனவே கதை இல்லாததால் சென்னைக்கு சரவணனை சமையல் போட்டிக்கு அனுப்பி வைத்து பெரும் கேலிக்கூத்தாக வருகிறது ராஜா ராணி 2.

பாரதிகண்ணம்மாவில், பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் விவாகரத்து கிடைக்குமா கிடைக்காதோ என்ற பரபரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு சிறிய மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கும் விதமாக நம்ப வீட்டு திருவிழா என்று இரண்டு சீரியல்களும் இணைந்து இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் மக்களை என்டர்டைன் செய்ய போவதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்