பிக்பாஸில் களமிறங்கும் 2 கவர்ச்சி நடிகைகள்.. டிஆர்பி-க்கு பலே திட்டம் போட்டு இருக்கும் விஜய் டிவி

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 6 கொஞ்சம் கால தாமதமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஆனால் போட்டியாளர்களின் பெயர் இப்போதே இணையத்தில் வெளியாகி இந்நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகி உள்ளது. முதலாவதாக விஜய் டிவியின் தொகுப்பாளர் ரக்சன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இவரைத் தொடர்ந்து ராஜலட்சுமி, கார்த்திக் குமார், ஸ்ரீநிதி ஆகியோரின் பெயர்கள் வெளியாகி உள்ளது.

Also Read :அமீர்-பாவனி திருமண சர்ச்சை.. விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடியில் இருந்து விலகலா?

மேலும் இசையமைப்பாளர் இமானின் முதல் மனைவியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்யும் இரண்டு நடிகைகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

அதாவது சீரியல் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து, தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

Also Read :ரக்சனை தொடர்ந்து பிக்பாஸில் களமிறங்கும் சர்ச்சை நாயகி.. இந்த சீசனில் தரமான சம்பவம் நிச்சயம்

வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் உள்ள தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டத்தில் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற உள்ளனர்.

சாதாரணமாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர்கள் போடும் போட்டோக்களே வேற லெவல் ட்ரண்டாகும். இந்நிலையில் நாள்முழுக்க இவர்களின் செயல்கள் பிக்பாஸில் ஒளிபரப்பாகும். இதனால் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் டிஆர்பி எகிறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read :பிக்பாஸில் கலந்து கொள்ளும் முதல் 5 போட்டியாளர்கள்.. இரண்டு விவாகரத்து பிரபலங்களை தட்டி தூக்கிய விஜய் டிவி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்