சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ரக்சனை தொடர்ந்து பிக்பாஸில் களமிறங்கும் சர்ச்சை நாயகி.. இந்த சீசனில் தரமான சம்பவம் நிச்சயம்

விஜய் டிவியில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ், 6-வது சீசனை வரும் அக்டோபர்2-ம் தேதி கோலாகலமாக தொடங்கப் போகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்களும் ஜூன் மாதம் துவங்கப்பட்ட நிலையில் கொரோனா தோற்று பாதிப்பின் காரணமாக கடைசி இரண்டு சீசன்களில் அக்டோபரில் துவங்கப்பட்டது.

5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன், 6-வது சீசனையும் தொகுத்து வழங்கப் போகிறார். அத்துடன் பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகுவது மட்டுமல்லாமல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்த சீசனில் யார் யார் போட்டியாளராக கலந்து கொள்கின்றார்கள் என்பது குறித்த தகவல்கள் சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அதில் VJ ரக்சன், சூப்பர் சிங்கர் பாடகி ராஜலட்சுமி, நடிகர் கார்த்திக் குமார், மாடல் அஜய் மெல்வின் ஆகிய 5 போட்டியாளர்கள் ஏற்கனவே தேர்வாகியுள்ளனர்.

தற்போது 6வது போட்டியாளராக ஒருவர் பிக்பாஸில் சம்பவம் செய்ய களமிறங்குகிறார். பிக்பாஸ் 6-வது சீசனில் சமீபத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய சீரியல் நடிகை ஸ்ரீநிதி போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீநிதி சிம்புவை காதலிப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசை இருப்பதாக கூறி வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஏற்கனவே பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் போலவே ஸ்ரீ நிதியும் 6வது சீசனில் இஷ்டத்திற்கு உளறிக் கொட்ட போகிறார்.

மேலும் பிக்பாஸ் 6வது சீசனில் ஸ்ரீநிதி போட்டியாளராக இருப்பதால் கண்டிப்பாக சிம்புவை விரும்பும் இன்னொரு போட்டியாளருக்கு விஜய்டிவி வாய்ப்பைக் கொடுத்து இருவருக்கும் சண்டையை ஏற்படுத்தி வைப்பார்கள் எனவும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News