எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட் பண்ணும் 6 நடிகர்கள்.. கமலுக்கு டஃப் கொடுக்கும் இரண்டு நடிகர்கள்

Supporting Actors: எந்த படமாக இருந்தாலும் சரி நடிகர்கள், நடிகைகளுக்கு இணையான ஒரு சப்போர்ட்டிங் கேரக்டர்கள் இருந்தால் இன்னும் அந்த படத்திற்கு கூடுதலாக வரவேற்பு கிடைக்கும். அதிலும் இந்த நடிகர்களை நம்பி எவ்வளவு பெரிய கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடித்துக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை பெற்ற ஒரு சில நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

கிஷோர் குமார்: இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்ததின் மூலம் மிகவும் பரிச்சயமான நடிகர். கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் சேர்த்து 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக நடித்துக் கொடுக்கக்கூடிய திறமை இவரிடம் இருக்கிறது என்று பல இயக்குனர்கள் இவரை நம்பி கொடுக்கிறார்கள். அதிலும் சமீபத்தில் இவர் நடித்த காந்தாரா திரைப்படம் பான் இந்தியா முழுவதும் இவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

Also read: கவுண்டமணியை பார்த்து அரண்டு போன கமல்.. சுத்தமா பிடிக்காமல் போவதற்கு இது தான் காரணம்

எம்.எஸ் பாஸ்கர்: இவர் கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல் தமிழில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற விருது மற்றும் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றிருக்கிறார். இவரிடம் நம்பி எந்த கதாபாத்திரத்தையும் கொடுக்கலாம். அதை அசால்டாக நடித்துக் கொடுக்கக்கூடியவர் என்ற பெயர் சினிமாவில் இவருக்கு என்று நிலைத்து விட்டது. அத்துடன் நடிப்பை தவிர டப்பிங் கலைஞராகவும் அவ்வப்போது பின்னணி பாடகர் ஆகவும் இவருடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தம்பி ராமையா: இவர் இயக்குனர், நடிகர், பாடகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்று பன்முகத் திறமையை கொண்டவர். இவர் 150 படங்களுக்கு மேல் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்து நமக்கு மிகவும் பரிச்சயம் ஆகிவிட்டார். அத்துடன் சில படங்களில் செண்டிமெண்ட் சீன்களில் நடித்து நம் கண்களில் கண்ணீர் வர வைக்கும் அளவிற்கு இவருடைய பெர்பார்மன்ஸை காட்டியிருப்பார்.

Also read:  கமல், கவுண்டமணி காம்போவில் அசத்திய 5 படங்கள்.. வசூலில் ரஜினியை பின்னுக்கு தள்ளிய இந்தியன்

பிரகாஷ் ராஜ்: இவர் பெயரைக் கேட்டாலே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது சிறந்த வில்லன் என்பதுதான். ஆனால் இவர் வில்லன் கேரக்டரில் நடிப்பதற்கு முன் சில படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர கேரக்டரிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இவருடைய வில்லன் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருப்பார். அதிலும் விஜய்க்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு வில்லத்தனமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

டெல்லி கணேஷ்: இவர் பெரும்பாலும் தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் துணை வேடங்களில் நடித்து பரிச்சயமானவர். இவர் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சில படங்களில் என்னதான் நெகடிவ் ரோலில் நடித்திருந்தாலும் இவருடைய இயல்பான குணமே ரொம்பவே சாப்ட்டாக நடிப்பது தான். அதிலும் இவர் அவ்வை சண்முகி படத்தில் கமலை மாட்டிவிட வேண்டும் என்பதற்காக செய்யும் ஒவ்வொரு செயலும் காமெடியில் முடிந்து இவருக்கே ஆபத்தாக அமைந்திருக்கும்.

பசுபதி: இவர் தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான ஒரு குணச்சித்திர நடிகர். அப்படிப்பட்ட இவர் நடித்த சில படங்களில் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றிருக்கிறார். அதிலும் ஈ, குசேலன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார். அத்துடன் கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தில் கொத்தால தேவனாக நடித்துக் கலக்கி இருப்பார்.

Also read: பட வாய்ப்பு இல்லாததால் கமல் கைபிடித்து தூக்கி விட்ட 6 நடிகைகள்.. த்ரிஷாக்கு அடித்த ஜாக்பாட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்