பட வாய்ப்பு இல்லாததால் கமல் கைபிடித்து தூக்கி விட்ட 6 நடிகைகள்.. த்ரிஷாக்கு அடித்த ஜாக்பாட்

Kamal Haasan: உலகநாயகன் கமலஹாசன் எப்போதுமே தன்னுடைய படங்களில் குறிப்பிட்ட நடிகர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதேபோன்று தமிழ் சினிமாவில் நிறைய சக நடிகர்களை தங்களுடைய படங்களின் மூலம் வளர்த்து விட்டிருக்கிறார் கமலஹாசன். நடிகைகளுக்கும் இதே போன்று கமலஹாசன் நிறைய வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக இருந்த ஆறு நடிகைகள் வாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது பட வாய்ப்பு கொடுத்து மீண்டும் சினிமாவில் ஜொலிக்க வைத்திருக்கிறார்.

த்ரிஷா: 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக இருக்கும் த்ரிஷா நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் என பல பேருடன் வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் த்ரிஷா பட வாய்ப்பு இல்லாமல் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கமலஹாசன் தன்னுடைய மன்மதன் அன்பு மூலம் அவருக்கு வாய்ப்பு வழங்கினார். இந்த படம் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தாலும் மன்மதன் அம்பு திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷா மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார்.

Also Read:ஜூன் 22 டபுள் ட்ரீட்.. ஆண்டவரை லியோவில் கோர்த்துவிட்ட லோகேஷ்

சிம்ரன்: நடிகை சிம்ரன் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக மாறியவர். இன்றுவரை இவருடைய அழகு மற்றும் நளினத்துக்கு இணையான நடிகை யாரும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தொடர் வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த சிம்ரனின் சினிமா வாழ்க்கையில் சற்று தொய்வு ஏற்பட்டு கொண்டிருந்த காலத்தில் கமல் பஞ்சதந்திரம் மற்றும் பம்மல் கே சம்பந்தம் என அடுத்தடுத்து வாய்ப்புகளை கொடுத்து சிம்ரனை தூக்கி விட்டார்.

ஆண்ட்ரியா: தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, பின்னணி குரல் கொடுப்பவர் என பல பரிமாணங்களை கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும் அந்த அளவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் தான் இருந்தார். கமலஹாசனின் பிரம்மாண்ட படமான விஸ்வரூபம் படத்தில் இவர் நடித்த பிறகு பல வாய்ப்புகள் வந்தன. உத்தம வில்லன் திரைப்படம் ஆண்ட்ரியாவை ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது.

Also Read:90களில் சம்பளத்தில் போட்டி போட்டு மோதிய 5 நடிகர்கள்.. இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு கோடி வாங்கிய ஹீரோ

ரம்யா கிருஷ்ணன்: நடிகை ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் அவருக்கான அடையாளம் என்பது படையப்பா படத்தில் நடித்த நீலாம்பரி கேரக்டர் தான். படையப்பா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகும் கூட ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையாமல் இருந்தது. பின்னர் கமலஹாசனின் பஞ்சதந்திரம் படத்தில் இவர் நடித்த மேகி என்னும் கேரக்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

ஊர்வசி: நடிகை ஊர்வசி, திரையில் கமலுக்கு இணையாக நடிக்க கூடியவர். இவர்களுடைய நடிப்பில் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாது. ஊர்வசியின் சொந்த வாழ்க்கையில் நடந்த சில ஏற்றத்தாழ்வுகளுக்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. கமல் மன்மதன் அம்பு திரைப்படத்தின் மூலம் கொடுத்த வாய்ப்பினால் மீண்டும் ஊர்வசி ரீ என்ட்ரி கொடுத்து இன்று நிறைய நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

பூஜா குமார்:. நடிகை பூஜா குமார் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர். 1997 இல் வெளியான காதல் ரோஜாவே என்னும் திரைப்படத்தில் நடித்த பிறகு இவரை பல வருடங்களாக சினிமாவில் பார்க்கவே முடியவில்லை. கமலஹாசன் தன்னுடைய விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலம் மீண்டும் பூஜா குமாரை சினிமாவிற்குள் கொண்டு வந்தார்.

Also Read:கமலுக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்.. அதுவும் இந்த டாப் இயக்குனரை நழுவவிட்ட சோகம்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்