வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஆபத்தில் சிக்க போகும் டிவி சேனல்கள்.. பல வருடங்களுக்கு முன்பே சொன்ன உலகநாயகன்

சினிமாவைப் போன்றே தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல பிரபலமாகி வருகிறது அந்த வகையில் தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் தற்போது புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.

ஒரு காலத்தில் சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் என்று சொல்லும் அளவுக்கு இல்லத்தரசிகள் பலரும் அந்த சேனலின் சீரியல்களை தான் விரும்பி பார்ப்பார்கள். தற்போது சன் டிவிக்கு போட்டியாக பல சேனல்கள் களமிறங்கியுள்ளது.

அந்த வகையில் ஒவ்வொரு சேனல்களும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்று கலக்கி கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களின் டிஆர்பி ரேட்டிங்கும் முன்னேற்றத்தில் இருக்கிறது. ஆனால் தற்போது இந்த தொலைக்காட்சி சேனல்களுக்கு எல்லாம் ஒரு பெரிய ஆபத்து வர இருக்கிறது.

அதாவது சில வருடங்களுக்கு முன்பு நாம் ஒரு திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் தியேட்டருக்கு தான் செல்வோம் அல்லது தொலைக்காட்சியில் போடும் வரை காத்திருப்போம். ஆனால் இப்போது அப்படி கிடையாது. மக்கள் வீட்டில் இருந்தபடியே திரைப்படங்கள், வெப் சீரிஸ் என அனைத்தையும் ஓடிடி தளத்தின் மூலம் பார்த்து விடுகின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட லாபம் இருக்கிறது. தற்போது அந்த நிறுவனங்கள் அடுத்த முயற்சியாக பிரபல சேனல்களை குறி வைத்திருக்கிறது. அதாவது ரசிகர்களை கவரும் வகையில் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை போன்று பல நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதற்கு ஓடிடி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளது.

அதில் சீரியல்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அந்த வகையில் விரைவில் ஓடிடி நிறுவனங்கள் இந்த முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது. இது பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

அவருடைய விஸ்வரூபம் திரைப்பட பிரச்சனையின் போது எதிர்காலத்தில் டிடிஎச் முறையைப் போன்று பல விஷயங்கள் வரும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அப்போது அவருடைய கருத்துக்கு பல எதிர்ப்புகள் எழுந்தது. ஆனால் அவர் கணித்தது போல் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு இந்த ஓடிடி நிறுவனங்களின் இந்த புதிய முயற்சி ஒரு உதாரணமாக இருக்கிறது.

- Advertisement -

Trending News