வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பாரதிகண்ணம்மா சீரியலை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல்.. டிஆர்பி எகிறுதப்பா!

தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை யார் டிஆர்பியில் முதலிடத்தை யார் பிடிக்கிறார் என்பதே போட்டியாக வைத்திருப்பார்கள். இதனாலேயே ஒவ்வொரு தொலைக்காட்சியும் வித்தியாச வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

அந்த வகையில் சமீபகாலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அந்த சீரியலை தற்போது ஓரங்கட்டிவிட்டு பிரபல தொலைக்காட்சியின் சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதாவது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் தற்போது டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடத்திலும் மே மாதத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான கொம்பன் திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

bharathi kannamma vijay tv
bharathi kannamma vijay tv

மூன்றாவது இடத்திற்கு தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் இடம்பிடித்துள்ளது. இதனால் விஜய் தொலைக்காட்சி தற்போது கடும் கோபத்தில் இருப்பதாகவும் பாரதிகண்ணம்மா சீரியல் இயக்குனரை கடுமையாக திட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர் கண்டிப்பாக மிகப்பெரிய வரவேற்பை பெற்று மீண்டும் முதலிடத்தை பிடிக்க வேண்டுமென இயக்குனருக்கு கட்டளை போட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Trending News