திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு.. 22 வருட சினிமா வாழ்க்கையில் இவ்வளவுதானா ?

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாகவே வலம் வருபவர் திரிஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடைய இளமையான தோற்றமே. இதற்காக திரிஷா பல விஷயங்களை கையாண்டு வருகிறார். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, யோகா என பல முயற்சிகள் செய்த தற்போது வரை இளமையாகவே உள்ளார்.

ஆனால் தற்போது திரிஷாவுக்கு தமிழில் அதிக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவருடைய பிறந்தநாள் கோலாகலமாக நடைபெற்றது.

இதனால் அவரை பற்றி பல செய்திகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதில் ஒன்றுதான் அவருடைய சொத்து மதிப்பு. கிட்டதட்ட 22 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருப்பதால் மற்ற நடிகைகளை காட்டிலும் இவர் சொத்து மதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

திரிஷா சென்னையில் ஒரு ஆடம்பர சொகுசு வீடு வைத்துள்ளார். அதில் தனது அம்மா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மதிப்பு 6 கோடி ஆகும். மேலும் பல ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் திரிஷா முதலீடு செய்து வருகிறார். மேலும் திரிஷா 3 கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.

ரேஞ்ச்ரோவர் எவோக் என்ற சொகுசு காரில் வைத்துள்ளார், இதன் மதிப்பு 60 லட்சம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக 41 லட்சம் மதிப்பு உடைய பிஎம்டபிள்யூ மற்றும் 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் ஆகிய கார்களை சொந்தமாக வைத்துள்ளார். மேலும் சில பிராண்ட் கம்பெனிகளில் அம்பாசிடராகவும் உள்ளார்.

தற்போது திரிஷா ஒரு படத்திற்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். மேலும் விளம்பரங்களிலும் நடித்து அதன் மூலமும் சம்பாதித்து வருகிறார். இவருடைய ஆண்டு வருமானம் 9 கோடி ஆகும். இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு 75 கோடியில் இருந்து 80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் நயன்தாரா, சமந்தாவை விட இவருடைய சொத்து மதிப்பு மிகவும் குறைவுதான்.

Next Story

- Advertisement -