திரிஷாவுக்கு இருக்கிற பிரச்சனையில் இது வேறயா.? எதற்கும் அலட்டி கொள்ளாமல் தூசி தட்டிய குந்தவை

Trisha : திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில் அவருக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் திரிஷா பிடித்து விடுவார் என கூறப்பட்டது. அதேபோல் அடுத்ததாக விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தார்.

இதைதொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடிக்கும் வாய்ப்பு திரிஷாவுக்கு கிடைத்தது. இவ்வாறு ஒருபுறம் வளர்ச்சி அடைந்தாலும் திரிஷாவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மன்சூர் அலிகான் திரிஷாவை விமர்சிக்கும்படி பேசி இருந்தார்.

இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் சமீபத்தில் அதிமுக பிரதிநிதி திரிஷாவை பற்றி பேசி சர்ச்சை கிளப்பி இருந்தார். இவ்வாறு திரிஷாவை பிரச்சினை சுத்தி சுத்தி அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி நிலவுகிறது.

Also Read : இனி ஒருத்தருக்கும் இந்த தைரியம் வரக்கூடாது.. ஒட்டுமொத்தமாக செக் வைத்து திரிஷா அனுப்பிய நோட்டீஸ்

நயன்தாரா மற்றும் திரிஷா இரண்டு பேரும் சில வருடங்களாக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே செல்கிறது. அவர் நடித்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. த்ரிஷாவின் மார்க்கெட் உயரத்தொடங்கி இருக்கிறது.

ஆனால் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இவ்வாறு பிரச்சனை வந்தாலும் அதை தூசி போல் தட்டிவிட்டு சென்று கொண்டிருக்கிறார். அதாவது இப்போது கமலின் தங் லைஃப் படத்திற்கு ரெடியாகி கொண்டிருக்கிறார். இதற்கான கதை விவாதத்தில் திரிஷா இறங்கி இருக்கிறாராம். எவ்வளவுதான் பிரச்சனை வந்தாலும் த்ரிஷா தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read : நடிக்கிறதுக்கே பணம் வாங்காத திரிஷா.. கேவலம் 25 லட்ச ரூபாய்க்கு இப்படியா பண்ணி இருப்பாங்க!

Sharing Is Caring:

அதிகம் படித்தவை