நடிக்கிறதுக்கே பணம் வாங்காத திரிஷா.. கேவலம் 25 லட்ச ரூபாய்க்கு இப்படியா பண்ணி இருப்பாங்க!

Trisha : சமீபத்தில் திரிஷா மீது அவதூறு பரப்பும் விதமாக ஒரு சம்பவம் நடந்தேறி இருந்தது. அதாவது அதிமுக முன்னால் செயலாளர் ராஜூ சமீபத்தில் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் நடிகைகள் வேண்டும் என்று கேட்டதாகவும் அதற்கு கருணாஸ் ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் திரிஷாவை வரவழைப்பதற்கு 25 லட்சம் கொடுப்பதாகவும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து அன்று மாலை திரிஷா தன் மீது தவறான செய்தியை பரப்பபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து ராஜு தான் கூறியது தவறு என மன்னிப்பு கேட்டிருந்தார்.

ஆனாலும் இந்த விஷயம் இப்போது சோசியல் மீடியாவில் பரவி ட்ரெண்ட் ஆகிவிட்டது. திரிஷா நடிப்பில் வெளியான தி ரோடு படத்தின் இயக்குனர் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது இந்த படத்தில் நடிப்பதற்கு 40 நாள் கால்ஷீட் திரிஷாவுக்கு வாங்கிய நிலையில் 60 லட்சம் சம்பளம் பேசபட்டது.

Also Read : ரோடு படத்தில் தெரியவந்த திரிஷாவின் உண்மை கேரக்டர்.. லோக்கல் கவுன்சிலரை அலறவிட்ட குந்தவை

ஆனால் சொன்ன நேரத்தில் படத்தை எடுத்து முடிக்க முடியாத காரணத்தினால் மேலும் 10 முதல் 15 நாட்கள் நடிக்க வேண்டி இருந்தது. ஆகையால் முன்பு பேசியதை விட 20 லட்சம் அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டது. அப்போது திரிஷா அந்த பணத்தையே வாங்க மறுத்து விட்டார்.

அப்படிப்பட்டவராய் 25 லட்சத்திற்காக தப்பான விஷயத்தை செய்திருப்பார். திரிஷா மீது தவறான குற்றச்சாட்டை வைத்தது மிகவும் தவறு என ஆவேசமாக தி ரோடு பட இயக்குனர் கூறி இருக்கிறார். மேலும் தொடர்ந்து த்ரிஷாவுக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

Also Read : திரிஷாவை போல் ஜெயலலிதாவுக்கு நடந்த கொடுமை.. சேலம் பிரபலத்துக்கு எம்ஜிஆர் கொடுத்த விசேஷ விருந்து

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்