வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

‘குமுதா ஹாப்பி’ நந்திதா வீட்டில் நடந்த சோகம்.. அவரை வெளியிட்ட பதிவு!

அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்பொழுது இவர் தனது பெயரை நந்திதா ஸ்வேதா என்று மாற்றி தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அபியும் நானும் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தை சிவசாமி(54) இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இவருக்கு தாய் மற்றும் இரண்டு தம்பிகள் உள்ளனர்.

இவருடைய நெருங்கிய தோழியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நந்திதாவின் தந்தையின் ஆத்மா சாந்தி அடையும் அடையட்டும் என்று இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல நட்சத்திரங்கள் தங்களது இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர்.

nanditha-twit
nanditha-twit
- Advertisement -

Trending News