கண்ணம்மாவாக நடிக்க மாட்டேன்.. வந்த வாய்ப்பை தவறவிட்ட பிரபல சீரியல் நடிகை

விஜய் டிவியில் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கேரக்டரில் முதலில் நடித்தவர் நடிகை ரோஷினி.

ஆனால் ரோஷினி சில காரணங்களால் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார். இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது கண்ணம்மா கேரக்டரில் மாடலும், நடிகையுமான வினுஷா தேவி நடித்து வருகிறார்.

ரோஷினியை தவிர வேறு யாரையும் இந்த சீரியலில் பார்க்க முடியவில்லை என்று கூறிய ரசிகர்கள் தற்போது இந்த புதிய கண்ணம்மாவை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர் ரோஷினியின் அளவுக்கு இல்லை என்றாலும் தன்னுடைய அருமையான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

ஆரம்பத்தில் ரோஷினிக்கு பதில் கண்ணம்மா கேரக்டரில் நடிக்க பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரேஷ்மாவும் ஒருவர்.

ரேஷ்மாவிடம் இந்த கேரக்டரில் நடிக்க அணுகிய பொழுது அவர் மறுத்துவிட்டார். ஏனென்றால் பூவே பூச்சூடவா சீரியல் முடிவுக்குப் பின்னர் ரேஷ்மா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதன் காரணமாக ரேஷ்மா இந்த வாய்ப்பை மறுத்துள்ளார் தன்னால் ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களில் கவனம் செலுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார். அதன் பிறகு வினுஷா தேவி கண்ணம்மாவாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது கண்ணம்மா கேரக்டருக்கு அவர் நன்றாக பொருந்தி விட்டார் என்று ரசிகர்கள் பலரும் கருதுகின்றனர்.

 

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்