தமிழ் நாட்டிலேயே முதல் இடத்தைப் பிடித்த சீரியல் எது தெரியுமா.? ஆரவாரத்தில் சன் டிவி!

வெள்ளித்திரை போலவே சின்னத்திரை சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில தமிழ்நாட்டின நம்பர் ஒன் சீரியல் எது என்ற தகவல் தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால் சன் டிவியில் துவங்கப்பட்ட சில மாதத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள கயல் சீரியல் தற்போது தமிழ்நாட்டின் நம்பர் ஒன் சீரியல் ஆக மாறியுள்ளது. இந்த சீரியலில் கதாநாயகனாக விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் பிரபலம் சஞ்சீவ் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதேபோல் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து கலக்கிய சைதன்யா, கயல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். எனவே கயல் சீரியலில் இவர்களது கெமிஸ்ட்ரி பக்காவாக ஒரு கூட்டம் உள்ளது.

அதிலும் குறிப்பாக சைதன்யா நர்ஸ் கெட்டப்பில் நச்சுன்னு இருப்பது இல்லத்தரசிகளை ரசிக்க வைப்பது மட்டுமல்லாமல் இளைஞர்களையும் வசியம் செய்துள்ளது. திரைப்படத்திற்கு நிகராக கதாநாயகி மற்றும் கதாநாயகி இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் இந்த சீரியலில் தூள் கிளப்புகிறது

இதனால் அனுதினமும் கயல் சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால், சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் எகிறுகிருக்கிறது. சீரியல் துவங்கப்பட்ட சில மாதத்திலேயே நல்ல ரீச் என்று கயல் சீரியலை பலரும் பாராட்டுகின்றனர்.

அத்துடன் ஒவ்வொரு வாரமும் இணையத்தில் வெளியாகும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவியின் கயல் சீரியல் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்