கள்ளக்குறிச்சியில் மரண ஓலம் கேட்கலையோ? வாய் திறக்காத 4 ஹீரோக்கள்.. நல்லவன் மாதிரி நடிக்கிறது ஒரு பொழப்பா!

Kallakurichi hooch tragedy: நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி இருக்கிறது. 5 உயிர் பள்ளியில் ஆரம்பித்த விஷ சாராயம் செய்தி தற்போது 35 ஆக உயர்ந்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதன்முறையாக இந்த சம்பவத்திற்காக ஆளும் கட்சியை சாடி இருக்கிறார். அவரை தவிர சினிமா சம்பந்தப்பட்ட யாருமே இந்த விஷயத்தைப் பற்றி பேசவில்லை. சினிமாவை சினிமாவாக பாருங்கள், எதற்காக இந்த விஷயத்தை பற்றி எல்லாம் கருத்து சொல்ல வேண்டும் என ஒரு பக்கம் அந்த நடிகர்களுடைய விசுவாசிகள் அவர்களை காப்பாற்றலாம்.

வாய் திறக்காத 4 ஹீரோக்கள்

ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கப் போகும் நடிகர்கள் சினிமாவை தாண்டி நிறைய நேரங்களில் சமூக கருத்துகளை சொன்னதால்தான் இப்போது அவர்களை நாம் எதிர்பார்க்கிறோம். நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் நிறைய மாணவர்களை படிக்க வைக்கும் இவர் காப்பான் பட ரிலீஸ் சமயத்தில் இந்தியாவின் கல்வி முறை குறித்து எல்லாம் கேள்வி கேட்டார்.

ஆனால் தற்போது இவர் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொருத்தவரைக்கும் தற்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் போது எக்கச்சக்க தலைவர்களுக்கு வாழ்த்து சொன்னது, பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டது என அமர்க்களபடுத்தினார். ஆனால் இந்த விஷயத்தைப் பற்றி எதுவுமே இன்று வரை வாய் திறக்கவில்லை.

அடுத்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன். எது எதற்கோ சமூக வலைத்தளத்தில் பதிவு போட்டு தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் தமிழ்நாட்டில் எதுவுமே நடக்காதது போல், இன்று குடியரசு தலைவர் திரௌபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து மட்டும் சொல்லி இருக்கிறார்.

நடிகர் சத்தியராஜ் கூட அவ்வப்போது அரசியல் பேசக்கூடியவர். ஆனால் அவரும் இன்று வாய் திறக்கவில்லை. நடிகர் அஜித்குமாரை பற்றி சொல்லவே வேண்டாம், அவர் எப்போதும் எதற்கும் வாய் திறந்து பேசக்கூடிய ஆள் கிடையாது.

சினிமாவில் ஹீரோயிசம் பேசக்கூடிய இந்த நடிகர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்காக கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் என்று இதுவரை விடை தெரியவில்லை.

Next Story

- Advertisement -