Connect with us
Cinemapettai

Cinemapettai

leo-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்த விஜய்.. போட்டிக்கு வந்த ஹீரோக்களால் ஆட்டம் கண்ட நம்பிக்கை

இதன் காரணமாகவே அவர் நமக்கு போட்டி யாரும் கிடையாது. நான்தான் நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்து வந்தார்.

கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் தன் படங்கள் மூலம் கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தி அவர் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக மாறியுள்ளார். அதனாலேயே அவருடைய படங்கள் வெளிநாட்டிலும் எக்கச்சக்கமாக பிசினஸ் ஆகி வருகிறது.

இதன் காரணமாகவே அவர் நமக்கு போட்டி யாரும் கிடையாது. நான்தான் நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்து வந்தார். ஆனால் அவருடைய இந்த நம்பிக்கை கொஞ்ச காலமாகவே ஆட்டம் கண்டுள்ளது. ஏனென்றால் ரிட்டயர்மென்ட் ஆகிவிடுவார்கள் என்று நினைத்த உச்ச நட்சத்திரங்கள் எல்லாம் தற்போது போட்டிக்கு நாங்க ரெடி என்ற ரீதியில் களமிறங்கியுள்ளனர்.

Also read: நம்ப வைத்து மோசம் செய்த அஜித்.. பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவிடம் தஞ்சமடைந்த விக்னேஷ் சிவன்

அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த கமல் தற்போது இந்தியன் 2, மணிரத்னத்துடன் ஒரு படம் என்று பிஸியாகி இருக்கிறார். அதே போன்று ரஜினியும் ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்து இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஞானவேல் சூப்பர் ஸ்டாரை இயக்க இருக்கிறார்.

இதனால் கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் வாரிசு படத்துடன் மோதி தன் பவரை நிரூபித்த அஜித்தும் ஏகே 62 மூலம் அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறார். அதேபோன்று சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களும் தங்கள் கைவசம் வெயிட்டான திரைப்படங்களை வைத்திருக்கின்றனர்.

Also read: அஜித் படத்தின் சீக்ரெட் கசிந்து விடும் என்பதால் கட்டளை போட்ட லைக்கா.. ஏகே 62 படத்திற்கு போட்ட பூஜை

இப்படி பெரும் போட்டி நிலவி வருவதால் விஜய் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம். எத்தனை போட்டி வந்தாலும் அவற்றையெல்லாம் அடித்து நொறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார். இதன் மூலம் உலக அளவில் ஹிட் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவருடைய திட்டம்.

இப்படி அவர் ஒரு பிளான் போட்டு வைத்திருக்கும் நிலையில் போட்டிக்கு வந்துள்ள இந்த ஹீரோக்களால் அவர் கடும் யோசனையில் இருக்கிறாராம். மேலும் இதையெல்லாம் ஓரம் கட்டும் அளவிற்கு படத்தின் வசூல் இருக்க வேண்டும் என்று லோகேஷிடம் கண்டிஷனாக கூறி இருக்கிறாராம். அதனாலேயே தற்போது லியோ திரைப்படம் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த வருடம் கோலிவுட்டில் பல தரமான சம்பவங்கள் நடக்க போவது என்பது மட்டும் உறுதி.

Also read: சைக்கோ இயக்குனரை லாக் செய்த லோகேஷ்.. மாறி மாறி புகழ்ந்து தள்ள இதான் காரணம்

Continue Reading
To Top