மீண்டும் முதல் இடத்தில கயல்.. சன் டிவி டிஆர்பியில் டாப் 5 இடங்களைப் பிடித்த சீரியல்கள்

சன் டிவி பல தரமான சீரியல்களை ஒளிபரப்பி அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் சில குறிப்பிட்ட சீரியல்கள் டி ஆர் பி எல் நல்ல இடத்தை பெற்று முன்னணியில் இருக்கிறது.

அப்படி டிஆர்பி யில் முன்னணியில் இருக்கும் சீரியல்களின் ரேட்டிங்கை அந்த சேனல்கள் இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சன் டிவியில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்களின் பட்டியல்கள் வெளியாகியுள்ளன.

இதில் பல வாரமாக தொடர்ந்து டி ஆர் பி யில் முன்னிலையில் இருக்கும் கயல் சீரியல் இந்த வாரமும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. நடிகை சைத்ரா ரெட்டி, நடிகர் சஞ்சீவ் இணைந்து நடிக்கும் இந்த சீரியல் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.

இந்த வரிசையில் வானத்தைப்போல சீரியல் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. சமீபத்தில்தான் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா சீரியலை விட்டு விலகினார். இதனால் பலரும் தங்கள் அதிருப்தியை சோசியல் மீடியாவில் தெரிவித்து வந்தனர். இருப்பினும் இந்த சீரியல் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இதில் மூன்றாவது இடத்தை சுந்தரி சீரியல் பெற்றுள்ளது. பெரியதிரை நடிகையான கேப்ரியெல்லா நடிக்கும் இந்த சீரியல் ரசிகர்களிடையே ரொம்பவும் பிரபலம். எதார்த்தமான கதை களத்தை கொண்ட இந்த சீரியல் தொடர்ந்து 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து ரோஜா சீரியல் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பல காலமாக தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வந்த ரோஜா சீரியல் தற்போது கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்து வருகிறது. இதனால் இந்த சீரியல் டிஆர்பி கொஞ்சம் சரிவை சந்தித்துள்ளது.

பிரித்விராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கும் கண்ணான கண்ணே சீரியல் இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து அபியும் நானும், அன்பே வா போன்ற சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தை பிடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆகியுள்ளது.

suntvserials
suntvserials