வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அதிரடியாக 90% வரை தள்ளுபடி விலையில் கேஜெட்டுகள்.. போட்டி போட்டு ஆஃபரில் டாப் நிறுவனங்கள்

Shopping: இப்போது எல்லாமே ஆன்லைன் மையமாகிவிட்டது. சாப்பிடும் உணவில் இருந்து சிறு சிறு பொருட்களை கூட ஸ்மார்ட் போன் இருந்தால் வாங்கிக் கொள்ள முடியும் என்ற நிலை வந்து விட்டது.

அதனாலேயே பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு ஆஃபர் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். அதில் தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ப்ளூடூத் ஹெட் போன்களின் விலை குறைந்துள்ளது.

அதிரடி விலை குறைப்பில் நிறுவனங்கள்

அமேசான், பிளிப்கார்ட் போன்ற பல நிறுவனங்கள் 90% தள்ளுபடி விலையில் இவற்றை விற்பனை செய்து வருகின்றன. இதனாலேயே இந்த பொருட்களை வாங்குவதற்கு நீ நான் என போட்டியும் நடந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு வரை நாம் வாங்கிய இந்த மின்னணு பொருட்களின் விலை தற்போது பாதிக்கு பாதியாக குறைந்து இருக்கிறது. அதன்படி கம்பெனி ஸ்மார்ட் வாட்ச்களின் விலை தற்போது 2000லிருந்து 999 வரை விலை குறைந்துள்ளது.

மேலும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற கண் கவரும் விளம்பரங்களும் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கடும் போட்டி தான்.

அதனாலேயே நேரடி விற்பனை முதல் ஆன்லைன் விற்பனை வரை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதையாக இந்த போட்டி நுகர்வோருக்கு சாதகமாக இருக்கிறது.

சமீபத்தில் ட்ரெண்டான செய்திகள்

- Advertisement -

Trending News