சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

எலக்ட்ரிக் ஸ்பூன், ஜப்பான்காரன் கண்டுபிடித்த புது ஐட்டம்.. சுகர், பிரஷர் எல்லாம் இனி கொறச்சிடலாம்

Electric salt spoon: நம்ம உடம்புல ஏற்படற பாதி நோய்க்கு காரணம் உப்பு தான். இதை குறைத்து விட்டாலே பிபி, சுகர் போன்றவை நம்ம பக்கம் வராது. பாதி உப்பு போட்டு சாப்பிடற பழக்கம் நம்மை பல பேருக்கு கிடையாது. ஒரு சிலரை கவனித்து பார்த்தால் எவ்வளவுதான் சாப்பாட்டில் உப்பு இருந்தாலும், உப்பு டப்பாவை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவார்கள்.

ஏன்னு கேட்டா உப்பு சுள்ளுன்னு இருந்தா தான் சாப்பாடு ருசியா இருக்கும்னு வக்கனையா பேசுவாங்க. கடைசில 40 வயசுக்கு மேல இவங்களுக்குத்தான் உயர் இரத்த அழுத்தம், சுகர் வரும். இதுக்கு அப்புறம் சாப்பாடுல உப்பு கம்மி பண்ணிக்கோங்க டாக்டர் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.

அஞ்சில் வளையாதது ஐம்பதில் மட்டும் எப்படி வளைந்து விடும். உப்பு இல்லாமல் சாப்பிட முடியாதுன்னு சொல்லி கட்டுப்பாடே இல்லாமல் சாப்பிட்டு அது பக்கவாதத்தில் ஆரம்பித்து கிட்னி ஃபெயிலியர் வரை கொண்டு போய் விட்டு விடும்.

சுகர், பிரஷர் எல்லாம் இனி கொறச்சிடலாம்

இப்படி இந்த உப்பால் இவ்வளவு பிரச்சனை இருப்பதால் தான் என்னவோ அதை வைத்து புதிய தொழில் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்த கிரின் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம். உப்பு உடம்புக்குள்ள போனால் பிரச்சனை, உப்பு சாப்பிடாமலேயே சாப்பிட்ட மாதிரி ஒரு உணர்வு இருந்தால் எப்படி இருக்கும்.

இது என்ன குரளி வித்தையா இருக்குன்னு தோணலாம். அதை தான் இவங்க செஞ்சு காட்டி இருக்காங்க. ரீசார்ஜ் செய்து கொள்ளக்கூடிய லித்தியம் பேட்டரி மூலம் மின்சார கரண்டியை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இந்த ஸ்பூனில் உப்பு போடாத சாப்பாட்டை எடுத்த சாப்பிட்டாலும் அதில் ஒரு வித மின்சாரம் பாய்ச்சப்பட்டு நாக்கிற்கு உப்பு சுவையை கொடுக்கும். உப்பில்லாத சாப்பாடு வயிற்றுக்குள் போனாலும் நாக்கிற்கு உப்பு சுவை இருப்பதால் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு அளவில் மூன்றின் இரண்டு பங்கு இது குறைத்து விடும் என்கிறார்கள்.

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். எதனாலும் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடலாம் ஆனால் உப்பு இல்லாமல் சாப்பிட முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மின்சார கரண்டி ஒரு வரப்பிரசாதம். இதன் விலை நம்ம ஊர் மதிப்பு படி 10 ஆயிரத்து 500.

இந்த வருடத்தில் மட்டும் முதலில் இருநூறு கரண்டிகளை விற்பனை செய்துவிட அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் பெருமளவில் இந்த ஸ்பூன் உபயோகத்திற்கு வந்தால் நம்மை உலுக்கி கொண்டிருக்கும் பிபி மற்றும் சுகர் போன்ற வியாதிகள் எட்டிப் போய்விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

Trending News