கர்ப்பமா இருக்கும் போது ஆட வச்சி அழகு பார்த்த டாப் நடிகர்.. 14 ஆண்டுகள் கழித்து வெளியான சீக்ரெட்

பொதுவாக ஹீரோயின்கள் பட வாய்ப்புகள் குறைந்து விட்டாலே வெளிநாட்டு மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால் வாய்ப்புகள் இருந்தும் கூட திருமணம் செய்து செட்டிலானவர்தான் இந்த நடிகை. டாப் ஹீரோவுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை அதன் பிறகு கவர்ச்சி நாயகியாகவும் வலம் வந்தார்.

அடக்க ஒடுக்கமாக நடிக்கும் போது வராத வாய்ப்பு இவர் கவர்ச்சி ரூட்டுக்கு மாறியதும் குவிய ஆரம்பித்தது. அதனாலேயே இவர் ஹீரோயின் வாய்ப்பு தான் வேண்டும் என்று கேட்காமல் ஒரு பாடலுக்கு ஆடுவது, செகண்ட் ஹீரோயின் போன்ற கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.

இப்படி பிசியாக இருந்த காலகட்டத்திலேயே திருமணம் செய்து கொண்ட நடிகைக்கு அதன் பிறகும் வாய்ப்புகள் குவிந்தது. அதிலும் அந்த காலகட்டத்தில் இவர் பிரபல நடிகர்களின் படங்களில் ஒரு பாடலிலாவது டான்ஸ் ஆடி விடுவார். அப்படித்தான் இப்போது மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகரின் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

Also read: வரலட்சுமி பூஜை செய்துவிட்டு வாங்கிய விவாகரத்து.. பிரிய முடியாமல் மீண்டும் சேர்ந்த ஜோடி

அந்த சமயத்தில் நடிகை மூன்று மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறார். இருப்பினும் அந்த நடிகருடன் ஆடுவது பெரும் பாக்கியம் என்று நினைத்த நடிகை தயங்காமல் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டாராம். இருப்பினும் நடிகையின் நிலைமையை கருத்தில் கொண்ட நடன இயக்குனர் அவருக்கு ஏற்ற மாதிரியான நடன அசைவுகளை தான் கொடுத்திருக்கிறார். டான்சில் பட்டையை கிளப்பும் அந்த நடிகரை ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு தன்னால் ஆட முடியவில்லை என்ற ஏக்கம் நடிகைக்கு பல மாதங்கள் வரை இருந்ததாம்.

இருப்பினும் வயிற்றில் குழந்தையுடன் அவர் பாதுகாப்பாகவே அந்த பாடலுக்கு ஆடி இருக்கிறார். இந்த சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கடந்து இருக்கிறது. ஆனாலும் இந்த விஷயம் பெரிய அளவில் யாருக்கும் தெரியாது. தற்போது அந்த நடிகையே இதைப்பற்றி பெருமையாக கூறியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: திருமணமான 15 நாளிலேயே காணாமல் போன கணவன்.. 15 வருடங்களாக எதையும் அனுபவிக்காமல் காத்திருக்கும் 49 வயது நடிகை

- Advertisement -