Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
வரலட்சுமி பூஜை செய்துவிட்டு வாங்கிய விவாகரத்து.. பிரிய முடியாமல் மீண்டும் சேர்ந்த ஜோடி
இப்பொழுதெல்லாம் காதல், திருமணம், விவாகரத்து என்பது வெகு சாதாரணமாகிவிட்டது. நினைத்தால் திருமணம், நினைத்தால் டைவர்ஸ் என்ற ரேஞ்சுக்கு இருக்கிறது இப்போதைய காலகட்டம். இப்படித்தான் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் ஒருவர் தன் கணவர் மீது இருந்த அதிக அன்பின் காரணமாக விவாகரத்து செய்து இருக்கிறார்.
அன்பு இருந்தால் எப்படி விவாகரத்து செய்ய முடியும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் கணவர் மீது ஓவர் பொசசிவ் ஆக இருந்த அந்த பிரபலம் அதுவே கணவருக்கு பிரச்சினையாகி விடக்கூடாது என்பதற்காக பிரிந்து விட்டாராம். மனைவி விவாகரத்து வேண்டும் என கேட்டதும் உடனே அவர் கணவரும் ஓகே என்று சொல்லிவிட்டாராம்.
இப்படித்தான் அவர்களுடைய விவாகரத்து கோர்ட்டுக்கு சென்று இருக்கிறது. மேலும் அவர்கள் எதிர்பார்த்ததுபடியே விவாகரத்தும் சட்டபூர்வமாக கிடைத்திருக்கிறது. அதிலும் அந்த பிரபலம் தன் வீட்டில் வரலட்சுமி பூஜை செய்துவிட்டு போய் இந்த விவாகரத்து சம்பந்தப்பட்ட பேப்பர்களை வாங்கிக் கொண்டு வந்தாராம்.
இதுதான் தற்போது கேட்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இப்படியும் சிலர் இருப்பார்களா என்ற நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்திருக்கிறது. ஆனால் இந்த விவாகரத்து தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது சம்பந்தப்பட்ட அந்த ஜோடி மீண்டும் தங்கள் வாழ்க்கையை சேர்ந்து வாழ முடிவு செய்து இருக்கிறார்கள்.
இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் எதற்காக இந்த விவாகரத்து என பல கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது இந்த ஜோடி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். இப்போதாவது நல்ல முடிவு எடுத்தீர்களே என்ற வாழ்த்துக்கள் குவிந்தாலும் சட்டத்தை வைத்து இப்படியெல்லாமா விளையாடுவது என்ற எதிர்ப்புகளும் கிளம்ப தவறவில்லை.
Also read: வெளியில் தான் ஹீரோ, வீட்டுக்குள்ள ஜீரோ.. நடிகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி
