திடீரென ட்ரெண்ட் ஆன அண்ணாமலையின் வாட்ச் விலை.. கோடிகளில் வாட்ச் வாங்கிய 6 இந்திய செலிபிரிட்டிகள்

முக்கிய அரசியல் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டின் தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவருக்கு எதிராக அவ்வப்போது நிறைய விஷயங்கள் கிளம்பும். அப்படி சமீபத்தில் இவர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் பயங்கர வைரலாகி கொண்டிருக்கிறது. அவர் கைகளில் அணிந்திருக்கும் வாட்சின் விலை 3.5 லட்சம் என்ற தகவல் தான் அது. இதுவே அதிக விலை என்றால், இந்திய செலிபிரிட்டிகளின் வாட்ச் விலையெல்லாம் கணக்கில் எடுத்தால் தலையே சுற்றிவிடும்.

நயன்தாரா: தென்னிந்திய சினிமா உலகின் முடிசூடா ராணியாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார். இவர் கைகளில் அணிந்திருக்கும் வாட்சின் இந்திய மதிப்பு 1.2 கோடியாகும்.

Also Read: மீண்டும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆக வரும் நயன்தாரா.. ப்ரீமியர் ஷோ படம் எப்படி இருக்கு.? விமர்சனம்

ஏ.ஆர்.ரகுமான்: தன்னுடைய இசையால் ரசிகர்களை கிறங்கடிப்பவர் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவர் இப்போது ஒரு படத்திற்கு 5 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார். இவருடைய வாட்சின் விலை 11,50,000 ஆகும்.

மோகன்லால்: மலையாள சினிமா ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் தான் மோகன்லால். 50 வயதை கடந்தும் இன்னும் ஹீரோவாக மலையாள சினிமா உலகை கலக்கி வருகிறார். இவர் அணிந்திருக்கும் வாட்சின் விலை 6 லட்சமாகும்.

அனுஷ்கா சர்மா: பாலிவுட் உலகின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை அனுஷ்கா சர்மா. சல்மான் கான், ஷாருக்கான் போன்ற டாப் நடிகர்களுடன் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கையில் அணிந்திருக்கும் வாட்சின் விலை 42 லட்சமாகும்.

Also Read: லேடி சூப்பர் ஸ்டாரை லாக் செய்த திரையரங்கு உரிமையாளர்கள்.. வேறு வழியின்றி சரண்டரானார் நயன்தாரா

விராட் கோலி: 19 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான கிரிக்கெட் போட்டியின் மூலம் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கியவர் விராட் கோலி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் தலைவராகவும் இருந்தவர். விராட் கோலியின் வாட்ச் விலை 57 லட்சமாகும்.

சச்சின் டெண்டுல்கர்: தன்னுடைய 11 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வந்தவர் தான் சச்சின் டெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை உலக அளவில் வாங்கி கொடுத்த பெருமை இவரையே சேரும். கிரிக்கெட் உலகின் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ என் அழைக்கப்படும் சச்சின் கைகளில் அணிந்திருக்கும் வாட்சின் விலை 1.3 கோடி ஆகும்.

Also Read: லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வந்த ஆபத்து.. அடுத்தடுத்த தோல்விகளால் கவனிக்கப்படாமல் போன நயன்தாரா

- Advertisement -