செகண்ட் இன்னிங்ஸில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்யத் துடிக்கும் 5 நடிகைகள்.. விஜய், அஜித் உடன் நடிக்க போகும் இளவரசி

சினிமாவை பொறுத்தவரைக்கும் நடிகைகளுக்கு ஒருமுறை மார்க்கெட் குறைந்துவிட்டதென்றால் ஒரு பாட்டுக்கு ஆடுவது, சின்னத்திரையில் நடிப்பது என அவர்களது சினிமா வாழ்க்கை அப்படியே சென்றுவிடும். ஒரு சிலர் மட்டுமே எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விடுவார்கள்.

த்ரிஷா: தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த த்ரிஷாவிற்கு, கடந்த 10 வருடங்களாகவே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றிப்படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த நேரத்தில் த்ரிஷாவுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிய தொடங்கி இருக்கின்றன. த்ரிஷா இப்போது நடிகர் அஜித்தின் AK62 மற்றும் நடிகர் விஜய்யின் தளபதி 67 ல் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Also Read: குந்தவைக்கு கோடிகளை வாரிக்கொடுக்கும் தயாரிப்பாளர்.. மொத்தமாக 100 நாட்களுக்கு வாங்கிய பெருந்தொகை

ஐஸ்வர்யா ராய்: இந்தி இண்டஸ்ட்ரி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகத்துக்கும் டாப் ஹீரோயினாக இருந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு சினிமா வாய்ப்புகள் அப்படியே குறைந்து போனது. சமீபத்தில் இவர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் நந்தினி கேரக்டரில் நடித்திருக்கிறார். இதனால் மீண்டும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஐஸ்வர்யா.

எமி ஜாக்சன்: தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். கிட்டத்தட்ட டைட்டானிக் பட ஹீரோயின் கட்டே வின்சல்ட்டுக்கு பிறகு தமிழ் ரசிகர்களால் விரும்பப்பட்ட அயல்நாட்டு ஹீரோயின் இவர். காதல், குழந்தைக்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்த இவர் இப்போது படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

Also Read: 2வது திருமணத்திற்கு தயாராகும் எமி ஜாக்சன்.. 3 நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த நடிகர்

நயன்தாரா: நயன்தாரா எப்போதுமே சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயினாக இருப்பவர். சில காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த இவர், ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இப்போது திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியிருக்கிறார்.

நித்யா மேனன்: நித்யா மேனன் வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சையமானவர். ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். சில ஆண்டுகளாக தமிழ் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் தனுஷின் திருச்சிற்றம்பலம் மூலமாக மீண்டும் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை தொடங்கி இருக்கிறார்.

Also Read: ஓவர் வெயிட் போட்டு காணாமல் போன 6 நடிகைகள்.. 2-3 படங்களில் ஆன்ட்டி போல் மாறிய ஹீரோயின்கள்

Next Story

- Advertisement -